Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

எந்த கும்பாபிஷேக நிகழ்வாக இருந்தாலும்

  • by

கோவில் எல்லைமாரியம்மன்..
மாரியம்மன் அவதார நட்சத்திரம்.. திருவாதிரை.
எந்த கும்பாபிஷேக நிகழ்வாக இருந்தாலும் எந்த தெய்வமாக இருந்தாலும் அதன் அவதார நட்சத்திரத்திற்கு தாரா பலன் பார்ப்பது சிறப்பு.
கும்பாபிஷேகத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்..
அசுவதி ரோகிணி மிருகசீரிஷம் புனர்பூசம் பூசம் உத்திரம் அஸ்தம் சுவாதி அனுஷம் மூலம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் வைப்பது நல்லது..
திதிகளாக..துவிதியை திருதியை பஞ்சமி சஷ்டி சப்தமி தசமி ஏகாதசி திரயோதசி நல்லது.
லக்னங்களாக பெண் தெய்வங்களுக்கு உபய லக்னங்கள் சிறப்பு.. இருப்பினும் துலாம் லக்னமும் சிறப்பு தான்.பெரும்பாலும் சர லக்னங்களை தவிர்க்கலாம்..8. 12இட சுத்தம் அவசியம். லக்னத்தில் பாவ கிரகங்கள் இருக்கக்கூடாது. மேலும் கும்பாபிஷேக கமிட்டி தலைவரின் ஜென்ம அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திரங்கள் கூடாது. கும்பாபிஷேகம் நடத்தும் நாளில் குரு சுக்ர அஸ்தமனம் கூடாது.
இந்த விதிகளின் படியே நாள் பார்த்தல் நல்லது..

மாசி மாதம் கும்பாபிஷேக நிகழ்விற்கு உகந்த மாதம் அல்ல..சித்திரை வைகாசி ஆனி தை பங்குனி மாதத்தில் வைக்கலாம்.

லக்னத்திற்கு 11 சூரியனோ சந்திரனும் இருக்கும் பொழுது லக்னம் குறித்து கொடுத்தால் எந்த வித குற்றங்களும் இன்றி சுபிட்சமாக இருக்கும் எனவே அந்த காலை 10:30 க்கு மேல் 12.00குள் கும்பாபிஷேகம் செய்ய உகந்த நேரமே….

சூரியன் பதினொன்றில் எனில் மேஷ லக்னம் வரும்.லக்னத்திற்கு பாதகத்தில் சூரியன் வருவது சிறப்பல்ல மேலும் பெண் தெய்வங்களுக்கு உபய லக்னங்களே சிறப்பு.

சரலக்னத்தில் கும்பம் (கடம்)
கிளம்பும் சிறப்பு
கும்பாபிஷேகம் செய்யும் அய்யர் கோவில் அர்ச்சகர்
பக்தர்கள் வளர்ச்சி அடைவார்கள்

ஸ்திர லக்னத்தில்
கும்பாபி ஷேகம்

கோவில் பல ஆண்டுகள் நிலைந்த அருள் பாலிக்கும்

22 2 2026 மாசி மாதம் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:50 மணி முதல் 11.59க்குள் மணிக்குள் கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதத்தில் புஷ்கர நவாம்சத்தில் கும்பாபிஷேகம் செய்ய சிறப்பு

வாக்கிய பஞ்சாங்கம் கோவிலில் பயன்படுத்தப்படுகிறது. வாக்கியபடி அன்றைய கிரகநிலைகள் மேற்கண்டபடி உள்ளது. அனேக கிரகங்கள் ஒரே வீட்டில் உள்ளது. இது சிறப்பா?

இந்த கோவில் 400ஆண்டுகள் பழமையான கோவில் எங்களுக்கு தெரிந்து கூறை யாகவும் பின்னர் ஓடு போட்டு இருந்தது தற்சமயம் சுமார் ஒன்றரை கோடியில் தரமான கருங்கலில் உருவாக்க பட்டுள்ளது.

வினாயகர்
மாரியம்மன் காளியம்மன் தனித்தனி சன்னதிகளில் அமைக்க பட்டுள்ளது.

இன்னும் பல நூற்றண்டுகள் நிலைத்து நிற்கும் இந்த கோவிலுக்கு சிறப்பான நேரத்தில் குடமுழுக்கு செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *