ஏழாம் பாவகம் உன்னுடைய எதிரி.
ஆறாம் பாவகம் உன்னுடைய துரோகி.
எதிரிக்கும் உன் மீது கருணை உண்டு.
துரோகிக்கு உன் மீது காழ்ப்புணர்ச்சி மட்டுமே உண்டு.
எதிரிக்குத் தேவை உன்னுடைய தோல்வி.
துரோகிக்கு தேவை உன்னுடைய வீழ்ச்சி.
ஏழாம் பாவகம் மனைவியாக அமையும். பூரி கட்டையால் அடித்தாலும் அரவணைக்கும். அடிக்கிற கைதான் அணைக்கும்.
ஆறாம் பாவகம் கடன் என்ற பெயரில் முதலில் அரவணைத்து பேசும் பிறகு ஏமாற்றி விடும். அணைக்கிற கை தான் அடிக்கும்.