Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

செவ்வாய் தோஷம்

💫செவ்வாய் தோஷம்: 💫
✨பொதுவாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திற்கு 2, 4 ,7 ,8 ,12 ஆகிய இடங்களில் இருப்பது செவ்வாய் தோஷமாக கூறப்படுகிறது.
✨ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பொழுது அந்த ஜாதகருக்கு திருமண தடை, குடும்பத்தில் பிரச்சனைகள், அடிக்கடி அடிபடுவது மற்றும் விபத்து ஏற்படுவது.கணவன் அல்லது மனைவி பிரிந்து செல்வது அல்லது கணவன் அல்லது மனைவியை இழப்பது போன்ற பலன்கள் ஏற்படுகிறது.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் அனைவருக்கும் இதே போன்ற பலன்கள் நடைபெறுமா என்றால் இல்லை.
✨செவ்வாய் தோஷத்திற்கு நம் மூல நூல்களில் அதிக விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன, இந்த விதிவிலக்குகளை பொருத்திப் பார்க்கும் பொழுது நூறில் 10 பேருக்கு கூட செவ்வாய் தோஷம் செயல்படும் நிலையில் இருக்காது.
அதேபோல் விதிவிலக்குகள் அனைத்தும் பொருந்தி வந்தாலும் சில ஜாதகங்களில் செவ்வாய் தோஷமானது வலுவாக செயல்படும்.
✨விதிவிலக்கு என்பது உதாரணமாக✨
✨1,லக்னம் அல்லது ராசிக்கு 2,4,7,8,12 இருக்கும் செவ்வாய் ஆட்சி உச்சமாக இருந்தால் தோஷமில்லை.
✨2, தன் சுய லக்னங்களான மேஷம் மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கு இருந்தாலும் தோஷம் இல்லை.
✨3, கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய நட்பு ராசிகளுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
✨4. செவ்வாய் சந்திர கேந்திரத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
✨5. செவ்வாய் தன் நட்பு வீடுகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் போன்ற ராசிகளில் இருக்கும் பொழுது தோஷம் இல்லை.
இதுபோல் செவ்வாய் தோஷத்திற்கு நிறைய விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நடைமுறையில் பிற அமைப்புகளையும் வைத்து பொருத்திப் பார்த்து கண்டறிய வேண்டும்.
✨செவ்வாய் தோஷத்தை விதிகளை மட்டும் வைத்து அறியாமல், விதிவிலக்குகளையும் கொண்டு பொருத்திப் பார்த்து சொல்வதற்கு ஜோதிடத்தில் நல்ல புரிதலும் அனுபவமும் கண்டிப்பாக தேவைபடுகிறது.
உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் விதிவிலக்குகளை கொண்டு செவ்வாயானவர், எட்டில் இருப்பது தோஷம் எனவும், விதிவிலக்காக எட்டாம் வீட்டில் ஆட்சி அல்லது உச்சமாக இருக்கும்போது தோஷம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
✨இப்போது மிதுன லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருப்பது தோஷம் என கொள்வோமானால், அந்த எட்டாம் இடத்தில் செவ்வாய் ஆனவர் மகரத்தில் உச்சம் பெறுவார், இப்பொழுது இதனை தோஷ நிவர்த்தி என்று கூற முடியாது. ஏனெனில் மிதுனம் மற்றும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் ஆனவர் முழு முதல் பாவி ஆவார். இந்தப் பாவ கிரகம் மிதுன லக்னத்திற்கு எட்டில் உச்சம் எனும் ஸ்தான பலம் பெரும்பொழுது அவர் கண்டிப்பாக ஒரு பொழுதும் இந்த லக்னத்திற்கு நன்மை செய்ய மாட்டார்.
✨மேலும் எட்டாம் பாவகத்தில் உச்சம் பெற்று இருக்கும் செவ்வாய் தனது, ஏழாம் பார்வையால் இரண்டாம் பாவகமான குடும்பஸ்தானத்தையும் பார்த்து வலுவாக கெடுப்பார். பொதுவாக திருமணம் என்று வரும்போது ஏழாம் பாவமான களத்திர ஸ்தானமும், திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து வாழ்வதற்கான குடும்பஸ்தானமாகிய இரண்டாம் பாவகமும் இங்கு மிகவும் முக்கியம்.
✨அதேபோல் கன்னி லக்னத்திற்கும் எட்டில் செவ்வாய் மேஷத்தினில் ஆட்சி எனும் நிலையினை பெறும் பொழுது கண்டிப்பாக கடுமையான தீய பலனை நடைபெறும். இதே செவ்வாயானவர் தன் நட்பு ராசியான சிம்ம லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் மீனத்தில்(நட்பு ராசியில்) அமரும்போது மற்ற பிற பாவ கிரக தொடர்பினை பெறாத வகையில் கெடுதல் செய்வதில்லை.
✨ பொதுவாக ஏழாம் பாவகம் மற்றும் எட்டாம் பாவகத்தில் இருக்கும் செவ்வாயே தோஷத்தினை அதிகமாக தருகிறார். ஏனெனில் ஏழாம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாகத்தையும், எட்டில் இருக்கும் செவ்வாய் தனது ஏழாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தையும் தொடர்பு கொண்டு கெடுப்பார்.
✨அதேபோல் இன்னொரு நட்பு ராசியான கடக லக்னத்திற்கு, செவ்வாய் ராஜ யோகாதிபதியாகவே இருந்தாலும் , ஏழாம் வீட்டில் உச்சம் பெரும் செவ்வாய் நட்பு லக்னமாகவே இருந்தாலும் ஸ்தான பலம் பெறும் நிலையில் ஒன்றைக் கொடுத்து ஒன்றை கெடுக்கும் நிலையில் இருப்பார், இதனை மற்ற கிரக பார்வை, சேர்க்கை, ஆதிபத்தியம் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
✨தன் சொந்த ராசியாகவே இருந்தாலும் மேஷ லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் விருச்சகத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாய், சனியின் தொடர்பினை பெரும் பொழுது தன் சொந்த லக்னமாகவே இருந்தாலும் கெடுதலை செய்யும். சூரியனுடன் அஸ்தங்கம் அடையும் செவ்வாயும், ராகு உடன் மிக நெருக்கமாக இணையும் செவ்வாய் ஆனவர் தோஷம் செய்யும் வலிமையை இழப்பார்.
✨ஆனால் லக்னம் மற்றும் தான் அமரும் ஆதிபத்தியத்தை பொறுத்து செவ்வாயுடன் இணைந்த ராகு அந்த தோஷத்தினை எடுத்து செய்யும், பொதுவாக செவ்வாயுடன் இணையும் ராகு மற்ற பிற கிரக தொடர்பினை பொறுத்து செவ்வாயை விட தோஷத்தினை வலிமையாக எடுத்து செய்வதை பல ஜாதகங்களில் காணமுடிகிறது.
✨இன்னும் பல விதமான அமைப்புகள் இந்த செவ்வாய் தோஷத்தில் இருக்கின்றது இதனை மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.
எனவே திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது தோஷம் உள்ள ஜாதகத்தை மற்றொரு தோஷம் உள்ள ஜாதகத்துடன் இணைக்க வேண்டும் என்று பொதுவாக கூறப்படுகிறது, ஆனால் அதனை லக்னத்தை பொறுத்து மற்ற கிரகம், ஆதிபத்திய மற்றும் தசா புத்தி போன்ற அமைப்புகளுடன் இணைத்து பொருத்தி பார்த்து இணைக்க இங்கு மிகுந்த அனுபவம் தேவைப்படுகிறது.
✨இறுதியாக நான் எப்பொழுதும் கூறுவது போல் எaருந்தாலும் அல்லது தோஷமாக இருந்தாலும் அதனை செயல்படுத்த அந்த கிரகத்தின் உடைய தசாவானது வரவேண்டும்.

1 thought on “செவ்வாய் தோஷம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *