🔴 நட்சத்திர கணங்கள்
நட்சத்திரங்களையும் மூன்று வகையான கணங்களாக பகுத்துப் பிரித்திருக்கிறது ஜோதிடம்.
🪭 1. தேவ கணம்
🪭 2. மனுஷகணம்
🪭 3. ராஜஸ கணம்
♦️ தேவகண நட்சத்திரங்கள் : –
1) அஸ்வினி
2) மிருகசீரிடம்
3) புனர்பூசம்
4) பூசம்
5) அஸ்தம்
6)சுவாதி
7) அனுஷம்
8) திருவோணம்
9) ரேவதி
இந்த ஒன்பதும்தேவ கண நட்சத்திரங்கள். . .
♦️ மனுஷ கண நட்சத்திரங்கள் : –
1) பரணி
2) ரோகிணி
3) திருவாதிரை
4) பூரம்
5) உத்திரம்
6) பூராடம்
7) உத்திராடம்
8) பூரட்டாதி
9) உத்திரட்டாதி .
இந்த ஒன்பதும் மனுஷ கண நட்சத்திரங்கள்.
♦️ ராஜஸ கண நட்சத்திரங்கள் :-
1) கிருத்திகை
2) ஆயில்யம்
3) மகம்
4) சித்திரை
5) விசாகம்
6) கேட்டை
7) மூலம்
8) அவிட்டம்
9) சதயம்
இந்த ஒன்பதும் ராஜஸ கண நட்சத்திரங்கள் .
♦️ தேவகண நட்சத்திரங்கள் என்றால் உயர்ந்தவை,
♦️ மனுஷ கண நட்சத்திரங்கள் என்பவை மத்திமமானவை,
♦️ ராஜஸ கண நட்சத்திரங்கள் என்பவை தாழ்ந்தவை என்பதான சிந்தனையும் சந்தேகமும் உங்களுக்கு வந்துவிட்டதுதானே!
ஒருவிஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
நட்சத்திரத்தில் உயர்ந்தது தாழ்ந்தது என்பதெல்லாம் இல்லை.
எந்த பேதங்களும் கிடையாது.
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை.
வானம் தெளிவாகவும் இருக்கும்;
மேகமூட்டத்துடனும் இருக்கும்.
கடல் அமைதியாகவும் இருக்கும்;
கொந்தளிப்புடனும் இருக்கும்.
குளத்தில் நீர் நிறைந்திருக்கும்;
வறண்டும் காணப்படும்.
அப்படித்தான்…
நட்சத்திரங்களில் நிறைகுறைகள் உண்டு.
இவற்றையெல்லாம்தான் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்… ஆஸ்ட்ரோ வாசுதேவன்.
♦️ தேவ கண நட்சத்திரக்காரர்களைப் பற்றி முதலில் பார்ப்போம். :-
தேவ கண நட்சத்திரக்காரர்களின் உடல் மெலிந்திருக்கும்.
மென்மையான தோலைக் கொண்டிருப்பார்கள்.
இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எவரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.
எதிரிகளே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
கோபத்தை வெளிக்காட்டமாட்டார்கள்.
உள்ளுக்குள்ளேயே வைத்து கறுவிக்கொண்டிருப்பார்கள்.
வீட்டை நேர்த்தியாக அழகுடன் பளிச்சென்று வைத்திருப்பார்கள்.
அலுவலகத்தில் இவருடைய இடம் எப்போதும் சுத்தமாக, அழகாக இருக்கும்.
அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.
புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். அதனாலேயே எளிதில் ஏமாறுவார்கள்.
அதேபோல் யார், எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள்.
கொஞ்சம் நைஸாகப் பேசி, இவரிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம்.
தேவ கண நட்சத்திரக்காரர்கள், நோய் தாக்கினால் தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள்.
சீசன் நோய்கள் என அடிக்கடி வந்துகொண்டே இருக்கும்.
சின்ன மழையில் நனைந்தாலே காய்ச்சல், சளி வந்துவிடும் இவர்களுக்கு.
மது, புகை முதலான கெட்டபழக்கங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
ஆனால்
அதற்குப் பழகினால், அதில் இருந்து மீளமுடியாதவர்களாக இருப்பார்கள்.
உறவினர்களால் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
எதுஎப்படியோ, மனதில் எதையும் வைத்துக்கொள்ளமாட்டார்கள்.
அதேபோல், தேவ கண நட்சத்திரக்காரர்கள், பல திறமைகளைக் கொண்டிருப்பார்கள்.
இறைசக்தி மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவர்கள்.
முயற்சிகள் தோற்றுப் போனால், சோர்ந்து போய்விடுவார்கள்.
பசி தாங்கமாட்டார்கள்.
அதேசமயம், இன்னன்ன உணவு வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்.
இவர்கள், குடும்பத்தின் மீது அதிக பாசமும்நேசமும் கொண்டிருப்பார்கள்.
குழந்தைகளை திட்டமிட்டு வளர்ப்பார்கள்.
அவர்களின் வளர்ச்சிக்காக, ரொம்பவே மெனக்கெடுவார்கள்.
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
எளிமையான உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொள்வார்கள்.
நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பார்கள்.
9843578188
அடுத்து…
♦️ மனுச கண நட்சத்திரக்கார்கள்:
நடுத்தரமான உடல்வாகு கொண்டவர்கள்.
சராசரியான உயரம் உடையவர்கள்.
உழைக்கத் தயங்காதவர்கள்.
தனக்கு ஆதாயம் இருந்தால்மட்டுமே அடுத்தவருக்கு உதவுவார்கள்.
பொருள் தேட எந்த ஊருக்கும், இடத்திற்கும் செல்பவர்கள் இவர்கள்.
குடும்பநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.
தனி மனித ஒழுக்கம் தவறுபவர்களாக சிலசமயங்களில் இருப்பார்கள்.
தீய பழக்கத்துக்கு எளிதில் வசமாவார்கள்.
அதேசமயம், விட்டுவிடவேண்டும் என்ற எண்ணம் வந்தகணமே விட்டுவிடுவார்கள்.
இவர்களுக்கு, எளிதில் நோய்தாக்கம் வராது,
அப்படியே வந்தாலும் சிலநாளில் குணமாகிவிடுவார்கள்.
பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.
சுற்றுலா ஆர்வம் உள்ளவர்கள்.
அதற்காகவே தனியாக சேமிப்பார்கள்.
எதிலும் திட்டமிடல் இருக்கும்.
குடும்பச் செலவுகளைக்கூட சரியாகத் திட்டமிட்டுக் கொள்வார்கள்.
ஆபரணங்களாக வாங்கி வைப்பவர்கள்.
தகுதிக்கு மேல் கடன் வாங்கமாட்டார்கள்.
அளவுக்கு அதிகமாக கடன்வாங்கினால் திருப்பிச் செலுத்தமுடியாமல் திண்டாடுபவர்கள்.
மனச்சோர்வு, மனசஞ்சலம் உடையவர்கள்.
தோல்விகளில் பாடம் கற்பவர்கள்.
கடினமாகப் போராடி வாழ்வில் முன்னேறுபவர்கள்.
ஒருகட்டத்தில் சம்பாதிப்பது போதும் என்ற எண்ணம் வந்து வாழ்வை அமைதியாகக் கழிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்.
♦️ இனி, ராஜஸ கண நட்சத்திரக்கார்கள் : –
நெடிய உருவம் கொண்டவர்கள்.
தடித்த உடல்வாகு உடையவர்கள்.
அதேபோல தடித்த தோல் உடையவர்கள்.
தலைமுடி கோரை போல இருக்கும்.
முன்கோபம்கொண்டவர்கள்.
கடின உழைப்பாளிகள்.
தோல்விகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வெற்றியடையும் வரை விடாமுயற்சியுடன் போராடுபவர்கள்.
பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காதவர்கள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்.
பொருள்தேடி உலகம் சுற்றுபவர்கள்.
பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
வேலை செய்துகொண்டிருந்தாலும் அதிகாரம் செலுத்தும் பதவியில் இருப்பவர்கள்.
நோய் பாதிப்பு குறைவாகக் கொண்டவர்கள்.
கெட்டபழக்கங்கள் எளிதில் பற்றிக்கொள்ளும். அதிலிருந்து மீளமாட்டார்கள்.
ஆச்சரியம்…
தீயபழக்கத்தால் குறைந்த பாதிப்புகளை மட்டுமே பெறுவார்கள்.
மன தைரியம் அதிகம் கொண்டவர்கள்.
துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள்.
இறை நம்பிக்கை அளவோடு இருக்கும். முயற்சியே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள்.
குடும்பப் பாசம் அளவோடு இருக்கும்.
ஆனால்
குடும்பத்தினரின் தேவைகளை மிகச்சரியாக செய்துகொடுப்பார்கள்.
அதிக பொருள் சேர்க்கும் ஆசை உடையவர்கள்.
அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள்.
நீண்டஆயுள் உடையவர்கள்.
27 நட்சத்திரங்களின் மூன்று வகையான பிரிவுகளையும் அந்த மூன்று பிரிவுகளின் கீழ் உள்ள ப்ளஸ் மைனஸ் குணங்களையும் இப்போது அறிந்திருப்பீர்கள்.
இந்த 27 நட்சத்திரத்தில் நீங்கள் எந்த நட்சத்திரம்,
உங்கள் மனைவி குழந்தைகள் எந்தந்த நட்சத்திரம்,
நண்பர்கள் உறவினர்கள் எந்த நட்சத்திரம் என்பதையெல்லாம் பார்த்து,
இந்த குணங்களைக் கொண்டு,
ஓர் ஓப்பீடு செய்துபாருங்கள்.
நட்சத்திரங்களின் மேன்மையும் ஜோதிட சாஸ்திர வல்லமையும் புரிந்து சிலிர்ப்பீர்கள்.