யட்சினிகள் என்றால் யார்?
இந்த பதிவில் சித்தர்களின் குரல். வாயிலாக
யட்ஷிணி தேவதைகளை பற்றிய ஆழமான இரகசியங்களை உங்களுக்கு பகிர்கிறேன்….
யட்ஷிணி தேவதைகளை பற்றிய பல தகவல்கள் பரவலாக மக்களிடத்தில் பேசப்படுகிறது.
பண்டைய இந்து புராணங்களில்
யட்ஷிணிகள் மனிதருக்கு மேலான சக்திகொண்டவர்கள்
ஆனால்
முப்பது முக்கோடி தேவர்களை விட சக்தி குறைவானவர்கள்
என்று கூறப்பட்டு இருக்கிறது.
முப்பத்து முக்கோடி தேவர்களிலும் இந்த யட்ஷிணிகளும் சேரும்.
இந்த அடிப்படையை நீங்கள் தெரிந்து கொண்டால் தான்
இந்த யட்ஷிணி யார் என்பது உங்களுக்கு விளங்கும்.
யட்சர்கள்
என்பவர்கள்
இந்து,
பௌத்த,
சமண
மதங்களில் குறிப்பிடப்படும் தெய்வீக சக்தி கொண்டவர்கள்;
இவர்கள்
செல்வங்களின் பாதுகாவலர்களாகவும்,
மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள்;
யட்சினி
என்பது அவர்களின் பெண் பாலினம்,
மேலும்
குபேரன்
யட்சர்களின் மன்னன்,
இராவணனும்
யட்ச குலத்தைச் சேர்ந்தவர்.
யட்சர்களின் முக்கிய அம்சங்கள்:
உருவ அமைப்பு:
மனிதர்களைப் போன்ற உருவம் கொண்டவர்கள்,
ஆனால்
மனிதர்களை விட உயர் சக்தி படைத்தவர்கள்.
பணி:
செல்வங்களைக் காத்தல், மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் நன்மை செய்தல்.
சமயங்கள்:
இந்து புராணங்கள்,
பௌத்தம்,
சமணம்
ஆகிய நூல்களில் குறிப்பிடப்படுகிறார்கள்.
யட்சினி:
யட்சர்களின் பெண் வடிவம் யட்சினி எனப்படுகிறது.
குபேரன்:
செல்வத்தின் கடவுளான
குபேரன்,
யட்சர்களின் மன்னன்,
செல்வங்களை பூமிக்கடியில் பாதுகாப்பவர்.
இராவணன்:
இலங்கையின் மன்னன்
இராவணனும்
யட்ச குலத்தைச் சேர்ந்தவர்.
பழமொழிகள்:
கிராமப்புறங்களில், ஒரு வேலை விரைவாக முடிந்தால்,
“யட்சினி வேலை”
என்று கூறுவதுண்டு,
இது அவர்களின் வேகத்தையும்,
சக்தியையும் குறிக்கிறது.
சமணம்:
சமணத் தீர்த்தங்கரர்களின் சிலைகளுக்கு இருபுறமும்
யட்சர்,
யட்சினி
சிலைகள் வைக்கப்படுகின்றன.
சுருக்கமாக,
யட்சர்கள் செல்வத்தையும்,
வளத்தையும்,
நன்மை பயக்கும் ஆற்றலையும் கொண்ட,
பண்டைய காலங்களில் வாழ்ந்த சக்தி வாய்ந்த ஒரு இனமாக
புராணங்கள் விவரிக்கின்றன.
இந்த யட்ஷிணிகளை
இந்து மதத்தில் 64 யட்சிணிகள்
என்றும்,
பௌத்தர்கள் 36 யட்ஷிணிகள்
என்றும்,
சமணர்கள் 24 யட்ஷிகள்
என்றும் அவர்களின் சமய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
உதாரணமாக
கர்ணயட்சிணி,
வட யட்சிணி
போன்றவர்கள் இந்து மத யட்சிணிகள்.
பௌத்த சமண சமையல் யட்சிணிகள் வேறு.
இதில் ஒன்றோடு ஒன்று முரணாகவும் சில ஒன்று போலவும் உள்ளது.
இதற்கு காரணம் அடிப்படை சமய மாற்றம் தான் முழு காரணமாக இருக்கிறது.
உதாரணமாக பௌத்த சமயத்தில் ஒரு கிளை ஜெயினர்கள்.
இந்த சமயங்களில் கூறப்படும்
யட்ஷிணிகள் 36
என்று சொல்லப்படுகிறது.
அதில் நமக்கு கிடைத்த
யட்சிணிகள் 30 மட்டுமே….
மீதம் 6 யட்சிணிகள் எங்கே எந்த சமயம் திருடிக்கொண்டதோ தெரியவில்லை.
உத்தரேஸ்வர தந்திரம்
என்ற நூலில்
நமக்கு கிடைத்த யட்சிகள் மட்டும்
இதோ……
32யட்சினிகளையும்,
அவர்களின் குணங்களையும்,
அவர்களை துதித்தால் கிடைக்கும் நன்மைகளையும்,
சுகங்களையும்,
சக்திகளையும் விவரிக்கிறது.
(1) ஹம்சினி:-
அன்னத்துடன் கூடிய இவள்,
பூமிக்கடியில் உள்ள புதையல்கள் மற்றும் ஒரு வித மையினால் கல் போன்ற சடப்பொருளையும் ஊருவி பார்க்கும் அருள் தருபவள்.
(2) பிசாசினி:-
(கொடூரமானவள்):
முச்சந்தி கூடுமிடத்தில்,
இவளுக்குரிய மந்திரத்தை 10,000 முறை தொடர்ந்து ஜெபித்து,
பச்சை கற்பூரம்
மற்றும்
நெய் படையலிட வேண்டும்.
(3) ஜனரஞ்சிகா:-
ஆண்களை மகிழ்வூட்டும் இவள் நல்ல வருங்காலத்தையும்,
மகிழ்ச்சியையும் தருபவள்.
(4) விசாலா:-
பெரிய கண்களைக் கொண்ட இவள்
ரசவாத அமுதத்தை வழங்குபவள்.
(5) மதனா:-
காம ரூபம் கொண்ட இவள் தரும் குளிகை
அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும்.
(6) காந்தா:-
உலகத்தவரை மதிமயக்கும் திறன் அளிப்பவள்.
(7) காலகர்ணி:-
காதுகளில் எமதூதர்களை அணிந்தவள்.
(8) மகாபயா:-
அதிபயங்கரமான இவள்
தரும் ரசவாத மருந்தால் பயம்,
நரை
மற்றும்
மூப்பிலிருந்து விடுபடலாம்.
(9) மகேந்திரி:-
மகாசக்தி பொருந்திய இவள்,
வானில் பறக்கும் சக்தி அளிக்கிறாள்.
(10) சங்கினி:-
சங்கு போன்றவளான இவள்,
அனைத்து ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாள்.
(11) சந்திரி:-
நிலாவைப் போன்றவள்.
(12) மசானா:-
மயான பூமியில் வாழும் இவள்,
செல்வத்தை வழங்குபவள்,
தடைகளை தகர்ப்பவள்,
கடைக்கண் பார்வையால்
மனிதர்கள் நடமாட இயலாதபடி செயலிக்க வைப்பவள்.
(13) வத்யாட்சினி:-
மந்திர குளிகை அளிப்பவள்.
(14) மேகலா:-
சுற்றிச் சுற்றி காதலிப்பவள்.
(15) விகலா:-
விருப்பமான பழங்களை வழங்குபவள்.
(16) லட்சிமி:-
ரகசிய இரசவாதம்
மற்றும்
தெய்வீக செல்வங்களை வழங்குபவள்.
(17) மாலினி:-
மலர்களை விரும்பும் இவள்
எவ்வித ஆயுதங்களின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துபவள்.
(18) சதபத்திரிகா:-
நூறு விதமான மலர்களை அணிந்தவள்.
(19) சுலோச்சனா:-
காதல் பார்வை கொண்ட இவள்,
காற்றில் வேகமாக பறக்கும்
ஆற்றலைத் தருபவள்.
(20) சோபா:-
முழு மகிழ்வும், அழகும் வழங்குபவள்
(21) கபாலினி:-
மண்டையோட்டுடன் கூடிய இவள்,
தூக்கத்தில்
வானில் எங்கும் செல்லும் ஆற்றலைத் தருபவள்.
(21) வரயாட்சினி:-
நாடி வருபவற்கு வரங்களை தருபவள்.
இவள் மறைந்திருக்கும் புதையல்,
இரசவாத குளிகை
மற்றும்
மந்திர யோகத்தை அருள்பவள்.
(22) காமேஸ்வரி:-
புதையல்,
மந்திர தந்திர தேவதை.
(23) மனோரமா:-
கவர்ச்சிகரமானவள்.
(24) பிரமோதா:-
நறுமண வாசனையுடையவள்.
(25) அனுராகினி:-
எளிதில் உணர்ச்சி வசபடக்கூடியவள்.
(26) நாகேசி
(27) பாமினி
(28) பத்மினி
(29) சுவர்ணாவதி:-
அஞ்சனா
சித்தியை அருளுபவள்.
(30) ரதிப்பிரியா:-
மிக அன்புடன் பழகக்கூடியவள்
காதலுக்கு உகந்தவள்.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்
சரி யாரு தான் இவர்கள்….?
வேறு யாரு
சமணம்,
பௌத்தம்,
ஜெயின்
போன்ற சமயத்தை சேர்ந்த பெண்
சமயக்குறவர்கள்
தான் இவர்கள்.
குறவர்
என்பது
சாதி
பெயர் அல்ல.
அது கூறுவோர் – கூறுபவர்
– குருவர் – குரு
அல்லது
ஆசிரியர்
என்ற பொருள் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில் இந்த குறவர்களை சித்தர்கள் என்று கூறுகின்றோம்.
சிவனே ஒரு குறவன் தான்,
திருவள்ளுவரும் ஒரு குறவன் தான்,
யட்சிகளில்
பெண்கள்
மட்டும் தான் உண்டு
ஆண்கள்
இல்லை என்பது பல ஆன்மீகவாதிகளின் கருத்து
அது உண்மை அல்ல……
யட்சிகளை
போல
யட்சன்களும்
உண்டு.
உதாரணமாக
குபேரன்
என்பவனும் ஒரு யட்சன் தான்.
குபேரன்
ஒரு ஜைன சமயத்தை சேர்ந்தவர் என்பது
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்….?
அது மட்டும் அல்ல
இலங்கை வேந்தன்
இராவணனும்
ஒரு யட்சன் தான்.
பொதுவாக
யட்சர்கள்
என்றால்
பஞ்சமா சித்திகளை பெற்று
அஷ்டமா சித்துக்களை கற்று
செல்வ வளங்ககளுடன் சுக போக ராஜ வாழ்க்கையை அடைந்து
மரணமில்லா பெருவாழ்வு வாழ்பபவர்கள்
என்று பொருள்…
(1) உண்மையிலே எட்சிணியை நாம் வசிய படுத்த முடியுமா….?⁉️
(2) எந்த ராசிக்காரருக்கு வசியமாகும்…?⁉️
(3) யாருக்கு வசியமாகும்…?⁉️
(4) அது வசியமானால் நமக்கு அழிவு ஏற்படுமா…?⁉️
இப்படி பல குழப்பமான கேள்விகளுக்கான பதில்….
முப்பத்து முக்கோடி தேவர்களில்
இந்த யட்ஷிணிகளும் அடங்கும்
என்று சொன்னேன்.
பொதுவாக முப்பத்து கோடி தேவ தேவதைகள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால்
சில
ஆணாதிக்க ஆளுமையால்
பெண்களை
ஏனோ ஒதுக்கியே வைத்துவிட்டார்கள்.
அதனால் தான்
யட்ஷிணிக்கு
தனி உலகம் இருக்கு…
மோகினிக்கு தனி உலகம் இருக்கு….
அப்சரஸ்க்கு தனி உலகம் இருக்கு
என்றெல்லாம் கதைகள் சொல்லி நம்மை மடை மாற்றி வைத்து விட்டார்கள்.
அவைகள் எல்லாம் வெறும் கதைகள் தானே தவிர
உண்மை துளியும் அல்ல…..
பொதுவாக எல்லா சமயங்களிலும் பெண் துறவிகள் உண்டு.
இந்து சமயத்தில் பெண் துறவி
மோகினிகள்
என்றும்,
சமண சமயத்தில் பெண் துறவிகள்
அப்சரஸ்
மாற்றும்
அரம்பையர்
என்றும், பௌத்த சமயத்தில் பெண் துறவிகளை – யட்சிணிகள் என்றும், ஜைன சமயத்தில் பெண் துறவிகளை இயக்கிகள் என்றும்,
இப்படி பல பிரிவுகள் உண்டு
இந்த பிரிவினை என்பது
பிரித்தாளும் அரசாட்சி காலத்திற்கு பிறகு ஏற்பட்டவை தானேயொழிய அதான் முற்காலத்தில் அல்ல.
பொதுவாக
ஆன்மீகத்தில் ஆசிரமத்தில் தங்கி துறவு நிலையில்
ஆண் / பெண்
இரு பாலரும் வர்ண படிநிலைகளின் படி
குருகுல கல்வியை கறக்கவேண்டும்
என்பது பண்டையக்கால பொது விதி.
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
சமணத்தில்
ஐம்புலன்களை அடக்கி பரமசுக்க நிலையை அடைய
யோகநிலையில் ஆடையின்றி அம்மணமாக இருப்பதால்
இவர்களுக்கு
அமணர்
என்ற பெயர் வந்தது
அமணர்
என்ற சொல் பிற்காலத்தில்
சமணர்
என்று மருவியது.
12 வயதில் முதல் நிலை குருகுல கல்வி பயிலும் மாணவர்களின் ஆடையின் நிறம்
கருப்பு நிற
ஆடை தொடங்கி
6ஆம் நிலை
காவி
நிறைந்தில் முடியும்.
இதுதான் ஆசிரமத்தில் தங்கி பயிலும்
பண்டைய கால குருகுல கல்வியின் படிநிலை
மாணவர்களின் அடையாள நிறங்கள்
இதை
வருணாசிரமம்
என்பார்கள்.
அதாவது
வர்ண + ஆசிரமம் = வர்ணாசிரமம்.
6ஆம் நிலை முடிந்து 7ஆம் நிலைக்கு ஒருவர் செல்வர் என்றால்
அவர் நீர் வர்ண ஆடையை அணிய வேண்டும்.
இதில் 18 நிலைகள் உண்டு
பதினெட்டாவது நிலை நிறமற்றது
பதினெட்டாம்படி கருப்பர் என்பவர் அவர் ஒரு சித்தர்
இவர் 18 படி நிலையை தாண்டியவர்
அது எப்படி இருக்கும் நீர் வண்ண ஆடை…..?
சிந்தியுங்கள்
நீர் வண்ணத்தில் ஒரு ஆடை இருக்குமா என்றால் இல்லை.
அவர்கள் சொல்லும் வண்ண ஆடை நிர்வாண ஆடை .!
புரிகிறதா…
குருகுல கல்வியில் 6ஆம் படிநிலையில் தேர்ச்சி பெற்று
7ஆம் படி நிலையை அடைந்தவர் என்றால்
அவர் முற்றும் துறந்த துறவி
அல்லது
நிர்வாண நிலையை அடைந்தா ஞானி என்று பொருள்.
ஒரு மனிதனின் 6ஆம் அறிவை தாண்டி 7ஆம் அறிவை கொண்டவனுக்கு
உடல்
என்பது வெற்று சுமையாகிறது.
அதனால்
அவர்கள் ஆடை அணிவதில்லை
அவர்களுக்கும் பூத உடலில் இருக்கும் காம இச்சை ஒழிந்து பரமசுக்க நிலையை அடைந்தால்
அவ்வாறான துறவிகளுக்கு ஆசாபாசங்கள் இருக்காது
12 வயதில் குருகுலம் சென்று தனது 30 வயதில் குருகுல கல்வியை முடிப்பது
துறவிகளின் உயர்நிலை குருகுல கல்வி முறை
அதை
மாற்றி தான்.
8 வயதில் குருகுலம் சென்று 12 வயதில் முடிப்பது தான் பண்டைய கால
இந்திய மரபாக பிற்காலத்தில் இருந்தது
ஆதியில் சமணர்,
பௌத்தர்,
சீக்கியர்,
ஜெயினர்
இவர்கள் எல்லாமே இவ்விதமான குருகுல கல்வி முறையை பின்பற்றினார்கள்.
அதில்
சமணர்கள் பின்பற்றிய குருகுல கல்வி முறை என்பது
12 வயதில் தொடங்கி 30 வயதில் முடியும்
ஒரு படிநிலை கல்வி என்பது 3ஆண்டுகள் 6படிநிலைகளை கடக்க 18ஆண்டுகள் ஆகும்
குருகுல கல்வியை முடித்த ஒருவர்,
கிட்ட தட்ட 30 வயதில்
வேத வேதாந்தசாத்திரங்கள் ,
வேதாந்தங்கள்,
உபவேதங்கள்,
தர்க்கம்,
அரசியல்,
அரசதந்திரங்கள்,
ஜோதிடம்,
மந்திரங்கள் ,
ஆயுர்வேத மருத்துவம்,
விவேகம்,
வைராக்கியம்,
ஆத்மஞானம்
போன்றவைகள் எல்லாமே அத்துப்படியாக இருக்கும்.
பிறகு அவர் மக்களோடு மக்களாக இருந்து பொது
மக்களுக்கு சேவை செய்வதும்
அல்லது
மேலும் 7ஆம் அறிவை தேடி காடு மாலைக்குகை போன்ற இடங்களில் இருந்து
நீண்ட நாள் நிர்வாண நிலையில் தவங்களை மேற்கொள்வதும் அவரவர் சுய விருப்பம்.
இப்படி தனிமையில் இருந்து 6ஆம் அறிவை தாண்டி
7ஆம் அறிவை அடைந்த
எத்தனையோ ஆண் சித்தர்களும்
பெண் சித்தர்களும் உண்டு.
இந்த சித்தர் என்பது சித்தம் அடைந்தவர் என்று பொருள்.
சித்தம் – பேரறிவு
இப்படி குருகுல கல்வியில் தேர்ச்சி பெற்று
ஆயக்கலைகள்
64கும்
நன்கு அறிந்து
மரணமில்லா பெருவாழ்வை அடைய
பரமசுக்க
நிலைக்கும் செல்லும் சித்தர்களை (துறவிகளை) காலம் கணிசமாக மறைத்து விட்டது.
இந்த பரமசுக்கநிலையை அடைந்த
கோடான சித்தர்களில் பெண்களும் உண்டு.
அந்த பெண்களை தான் நாம் இன்று
மோகினி
என்றும்,
யட்ஷிணி
என்றும்,
அரம்பையர்
என்றும்,
அப்சரஸ்
மற்றும் இயக்கிகள் என்றும் கூறுகிறோம்.
இவர்களை மனிதர்களாகிய நாம் வசியம் செய்யலாமா….?
அப்படி வசியம் செய்தால்
அது அழிவில் தான் முடியும்
என்கிறார்களே உண்மையா….?
மோகினி காமத்துக்கான தேவதையா…?
யட்ஷிணி
நாம் கேட்டதை எல்லாம் கொண்டுவந்து தருமா…?
பொதுவாக
யட்ஷிணிகள்
வசியமாவது கடினம் என்பார்கள்.
ஆனால்
உண்மை அதுவல்ல,
யட்ஷிணியை வசியம் செய்வது தான் கடினம் என்கிறேன்.
நான் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
எல்லோருக்கும் எல்லா யட்ஷிணிகளும் வசியமாகும்.
நாம் தான் அதற்கான மனப்பக்குவங்களை கொண்டுருப்பதில்லை.
காரணம்
நாம் மன ஓட்டதின் வேகம் தான் முழு காரணம்…
பொதுவாக
எந்த ஒரு
தேவ
தேவாதிகளையும்
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் வசியமாகும்,
வசிய சக்தி என்பது எல்லோருக்கும் உண்டு.
அந்த சக்தியை முறையாக கற்று பின்
அஷ்ட வித
(எட்டு வித )
வசியங்களும் செய்யலாம்.
அதில்
மாயா சக்தி
எனும்
பிரம்மசக்தி
தான் மிக பெரிய சக்தி
அது எல்லா உடலிலும் உண்டு.
இது தான் காஸ்மிக் எனர்ஜி
என்றும் மனித ஆன்மாவுக்கேவுரிய
weel power
என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சக்தியை தனது ஞான சக்தியால் கண்டறிந்து
அதை முறைப்படுத்தி
தனது ஆன்மாவை இந்த ஊண் காயத்திலிருந்து
வலியில்லாமல் உதிர்த்து விட்டு
பரமம்
எனும் மாயைநிலையை
அடைவது தான் பொதுவாக யோகம் என்பார்கள்.
ஒருவனுக்கு வாழும் காலத்தில் யோகம் கிடைத்தால் அது சிற்றின்பம்,
அதே அவனுக்கு வலி இல்லாத மரணம்
அல்லது
மரணமில்லாத
ஒளியூற்று; காஸ்மிக்
எனர்ஜியோடு கலந்துபோவது என்று பொருள்
மரணமில்லா பெருவாழ்வு கிடைத்தால்
அது பேரின்ப நிலை என்கிறார்கள் யோகிகள்.
இப்படி பஞ்ச பூதங்களை அடக்கி
அவைகளை தான் வயபடுத்தியவர்கள் தான்
மனிதனை விட உயர்ந்த சக்திகளை கொண்டவர்கள்
இவ்வாறானவர்களை தான்
யோகிகள்,
சித்தர்கள்,
மோகிகள்,
கந்தர்வர்கள்,
யட்ஷிகள்,
என்று பல பல பெயர்களில் அழைக்கப்படுகிறோம்.
சாதாரண நிலையில் இருக்கும் நமக்கு வழிகாட்டியாக
மேல் சொன்னவர்கள் என்றும் இருக்கிறார்கள்.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்
ஆனால்
அவர்களை அடைந்து அவர்களுக்கு தன்னை சீடராக அர்ப்பணித்து
அவர்கள் நடத்தும் நல்வழியில் பயணிக்க
பல மனிதர்கள் இன்றைய சூழலில் தயாராக இல்லை.
சரி பொதுவாக இவர்களை எப்படி தான் நாம் அடைவது….?
மேலே சொன்ன காஸ்மிக் எனும் பிரபஞ்ச ஒளியின் ஒரு சிறு அங்கங்கள் தான்
இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும்….
அதில் 6அறிவு கொண்ட ஜீவராசி மனிதன்.
இந்த மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் தாய் காஸ்மிக் ஒளி தான்.
இப்படி சொன்னால் உங்களுக்கு எளிதில் புரிந்து விடும்…..
காட்டில் தன்னிச்சையாக சுற்றி திரியும் யானையை
ஒரு மனிதன் தன் வயப்படுத்தி
அதை நம் சொல் பேச்சை கேட்டு அதன் படி செயல் பட வைக்க எவ்வளவு முயற்சியும்
பயிற்சியும்
தேவைப்படும்…?
ஒருவர் ஒரு பெண்ணை நேசிக்கிறார்.
அந்த பெண்ணை அடைய வேண்டும் அதற்காக
அவர் எவ்வளவு உழைக்க வேண்டும்….?
சிந்தியுங்கள்
ஒருவர் ஒன்றை அடைய வேண்டுமென்றால்
அதற்க்க
அவர் கடுமையாக உழைக்க வேண்டும்
இதுதான் இந்த உலகின் பொதுவான விதி.
இப்படித்தான் நாம் தேவ தேவாதிகளை அடைய வேண்டுமென்றால்
கடுமையான மன உழைப்பும்,
உடல் உழைப்பும் தேவைப்படுகிறது.
நீங்க எந்த தெய்வத்தை வசியம் செய்ய நினைத்தாலும்
மேலே சொல்வது தான் நிதர்சனமான உண்மை.
சிலர்
யட்ஷிணி,
மோகினி,
அப்சரஸ்
போன்ற தேவதைகள் நிர்வாணமாக தான் இருக்குமாமே
உண்மையா என்று கேட்டார்கள்,
இதுபோலான தேவதைகளை வசியம் செய்தால்
நம் உயிருக்கே ஆபத்தாமே
உண்மையா ஐயா என்றும் கேட்டிருந்தார்கள்.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்
பொதுவாக நீங்க எந்த தேவதை எடுத்தாலும்,
அது எல்லாம் மனிதர்களை போல இருக்காது.
நீங்கள் எப்படி?
என்ன?
கற்பனை செய்துகொண்டு அந்த தேவதையை
வழிபடுகிறீர்களோ
அவ்வாறே அவைகள் உங்கள் ஊண்கண்ணுக்கு தெரிகிறது.
இதுதான் உண்மை…..
எந்த தெய்வத்தையும் அவர்கள் அப்படிதான் என்று முடிவு செய்துவிடக்கூடாது.
அவர்களை
தகப்பனாக,
தாயாக,
தங்கையாக,
அக்காவாக தான் நம் எண்ணத்தில் வைத்துகொண்டு வழிபட வேண்டும்.
இப்படி செய்யும் பொது
அந்த தேவதைகளுக்கும் அதை வணங்கும் நமக்கு காம இச்சை ஏற்படாது.
அவர்கள் நம்மை பிள்ளையாக,
தந்தையாக தம்பியா பாதுகாத்து
நமக்கு நம்மீது அன்பு காட்டுவார்கள்.
மாறாக பெண் தேவதைகளை காமபொருளாகவோ,
காதலியாகவோ
நினைத்து வழிபட்டால் அது உங்களுக்கு அடிமைப்பட்டு இருக்கும் போது
உங்களோடு மாயை கலவியில் (sex) ஈடுபடும்.
அவ்வாறு கலவிகொண்டால்
நிச்சயம் உங்கள் விந்து விரயமாகி
நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு
கடைசியில் மரணம் அடைவது உறுதி.
இதனால்
தான் ஒரு குரு உதவியோடு
எந்த தெய்வத்தையும் வசியம் செய்யவேண்டும்
என்பார்கள் முன்னோர்கள்.
ஆனால்
இன்றைய சூழலில் நிறைய குருமார்கள்
இப்படி சில சூட்சமங்களை சொல்லிக்கொடுப்பதில்லை.
மாறாக பயத்தை தன் சீடனுக்குள் புகுத்தி அவனை திசை திருப்பி
கடைசிவரை அவன் இலக்கை அடைய விடாமல் தடுக்கும் குருமார்கள் ஏராளதிலும் ஏராளம்.
யட்ஷிணிகள் நமக்கு உண்மையாக இருந்து
நாம் கேட்கும் பொருட்களை கொண்டு வந்து தரும் என்கிறார்களே
இது உண்மையா.?
என்று உங்களில் பலருக்கு இந்த கேள்வி மனதில் இருக்கும்
அல்லவா…..?
ஆம் உண்மை தான்..
நாம் கேட்கும் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும்.
ஆனால்,
அப்படி கொடுக்கும் பொருட்களினால் நமக்கு எந்த பயனும் இருக்காது.
அப்படியே நாம் அதை பயன் படுத்துவதாக இருந்தாலும் அது நமக்கு அழிவை தான் கொடுக்கும்.
நாம் தேவதைகளிடம் பெறும் எந்த ஒரு பொருளையும் நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது.
அந்த எண்ணமும் நமக்கு இருக்க கூடாது.
நாம் பெற்ற எந்த பொருளும் நமக்கானது அல்ல,
அது நம்மை தேடிவரும் சாதாரண மனிதர்களுக்கானது.
உபதேசமாகட்டும்,
பொன் பொருளாகட்டும்,
அமானுஷ்ய சக்தியாகட்டும்,
எதுவாக இருந்தாலும்
அதை அப்படியே முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியாது.
அனுபவிக்கவும் கூடாது
குறிப்பாக :-
இதுபோல ஜால தேவதைகளை வைத்து
பிறர் பொருட்களை திருடவோ,
கொள்ளையடிக்கவோ,
கூடாது…
நம் நோக்கம் பிறரை மகிழ்விப்பதாகவே இருக்க வேண்டும்.
இன்னும் சில கட்டுப்பாடுகள் உண்டு
இவைகளை குருவின் வழி காட்டுதலின் படி கேட்டு நடந்துக்கொண்டால்,
எல்லாம் சாத்தியம்
இதுவே சத்தியம்
நன்றி🙏
🪭 உத்தரேஸ்வர தந்திரம் நூலில் இருந்து….