Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

ராகு காலம்,எமகண்டம் நேரங்களின் சூட்சும ரகசியம்

  • by

ராகு காலம்,எமகண்டம் நேரங்களின் சூட்சும ரகசியம்

வாழ்வில் நடக்காத நல்லதை கூட நடத்திக் காட்டும் ராகு கால, எமகண்ட நேரங்களின்
சூட்சம ரகசியம்.

இது மறைக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரத்தை வெளிப்படையாக பாமர மனிதர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்லும் அரிதான பதிவு!

உலகத்திலேயே நீங்க மிக மிக அதிர்ஷ்டசாலியாக
மாறி வேண்டுமா?

அப்ப இந்த பதிவை கவனமாக படியுங்கள்!

இதில் சொல்லப்பட்டுள்ள
ராகு கால, எமகண்ட நேரங்களின்
சூட்சம ரகசியத்தை உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து மிக மிக அதிர்ஷ்டசாலியாக
மாறுங்கள்.

ராகு காலம், ராகுவிற்கு உரிய காலம்.

எமகண்டம், கேதுவிற்கு உரிய காலம்.

பொதுவாக இந்த ராகுகால,எமகண்ட நேரங்களில் நாம்
நல்ல விஷயங்கள் எதையுமே செய்ய மாட்டோம்.

அப்படிப்பட்ட இந்த ராகுகால எமகண்ட
நேரத்தில் கூட நாம் சில விஷயங்களை செய்யும் போது அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும்.

அது எந்தெந்த விஷயம். அந்த விஷயங்களை எல்லாம் எப்படி செய்வது என்பதை பற்றிய இதுவரை நீங்கள் அறிந்திடாத சூட்சம குறிப்புகளைதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வாழ்வில் நடக்காத நல்லதை கூட நடத்திக் காட்டும் ராகு கால, எமகண்ட நேரங்களின்
சூட்சம ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள இனி பதிவுக்குள் செல்லலாம்.

நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள்.

நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ராகு ஒரு சின்ன விஷயத்தை கூட பிரம்மாண்டமாக மாற்றக்கூடிய சக்தி கொண்டவர்.

இவரை ஜாதகத்தில் பிரம்மாண்டம் என்று சொன்னாலும், இவர்
ஒரு நிழல் கிரகம் என்பதால், நம்முடைய மதியை மயக்க கூடிய வேலையை இவர் செய்ய தொடங்கி விடுவார்.

உதாரணத்திற்கு நீங்கள் பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்த இடத்தில் நம்முடைய மதியை மயக்கி ஆயிரம் ரூபாயை கூட செலவு செய்ய வைத்து விடுவார்
இந்த ராகு பகவான்.

இந்த ராகு பகவான் நம்மை
எல்லாவற்றையும்
இழுத்து விட கூடிய வேலையை செய்து விடுவார்.

நாம் செய்யக்கூடிய
நல்ல வேலையை செய்ய விடாமல் தடுத்து விடுவார்.

குறிப்பாக எந்த ஒரு
நல்ல காரியத்தையும் இதனால்தான் இந்த ராகு காலத்தில் நாம் செய்ய மாட்டோம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இதுதான் ராகுவின் வேலை.

இப்படிப்பட்ட இந்த
ராகு காலத்தில்
நாம் என்ன நல்ல காரியத்தை செய்து
விட முடியும்?
என்று நமக்கு சந்தேகம் வரும்.

நம்முடைய வாழ்விற்கு ஒத்து வராத ஒரு விஷயத்தை இந்த ராகுகால நேரத்தில் செய்தால், அதை நாம் திருப்பி திருப்பி செய்யாமல் தடுத்து விடுவார் இந்த ராகு பகவான்.

உதாரணத்திற்கு உங்கள் குழந்தைக்கு ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று வைத்து கொள்வோம்.

ஆனால் உங்கள் குழந்தைக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது.

எனவே அந்த குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிடவே கூடாது என்று வைத்துக் கொள்வோம்.

ராகு கால நேரத்தில் அந்த குழந்தைக்கு ஐஸ்கிரீமை வாங்கி கொடுங்க.

அந்த குழந்தை அடுத்த நாளிலிருந்து அந்த ஐஸ்கிரீமின் மேல் இருக்கக்கூடிய ஆசையை விட்டுவிடும்.

(நாம் ரொம்பவும் விரும்பி செய்யக்கூடிய ஒரு விஷயத்தை, திரும்பவும் செய்யவிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இந்த ராகு பகவான் செய்கின்றார்.)

யாருக்காவது நிறுத்த முடியாத கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால், (ஆபாச வீடியோ பார்ப்பது, குடிப்பழக்கம்,புகை பிடிக்கும் பழக்கம்) அவர்களுக்கு இருக்கும் அந்த கெட்ட பழக்கத்தை ராகு கால நேரம் முழுவதும் செய்ய வேண்டும்.

(ராகு கால நேரம் முடியும் நேரத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது,குடிப்பது,புகை பிடிப்பது போன்ற
கெட்ட பழக்கங்களை
செய்ய வேண்டும்.)

அதன் பிறகு அந்த கெட்ட பழக்கத்தை அந்த நபர் மீண்டும் மீண்டும் செய்யவே மாட்டார்.

அதற்காக கெடுதலை
ராகு கால நேரத்தில் செய்ய வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது.

நன்றாக புரிந்து வைத்து கொள்ளுங்கள். (நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு கெட்ட பழக்கத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனும் பட்சத்தில், அந்த கெட்ட பழக்கத்தை ராகு கால சமயத்தில் செய்யும்போது, அதை நாம் மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்போம். அதற்கான சக்தி இந்த ராகு காலத்தில் உள்ளது.)

ராகுவை போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை.

கேதுவின் வேலை என்ன என்றால் எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதை உடனே தடுத்து நிறுத்தி விடுவார்.

நீங்கள் நல்லதை செய்தாலும் சரி,
கெட்டதை செய்தாலும்
சரி, பெரிய அளவில் செய்தாலும் சரி, சிறிய அளவில் செய்தாலும் சரி, நீங்கள் செய்யப் போகும் காரியத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதுதான்
கேதுவின் வேலை.

ஜாதக கட்டத்தில் கேது சரியாக அமையவில்லை என்றால் அவ்வளவு தான் அவர்களின் வாழ்வு முழுவதும் மருத்துவ செலவில் சென்று விடும்.

தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை.

என்ன செய்வது?

எமகண்ட நேரத்தில் மருத்துவ செலவுகளை செய்யுங்கள்.

எமகண்ட நேரம் இருக்கும்போது தொடர்ந்து ஒரு சில
நாள் மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள்.

நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய பழக்கம் காலப்போக்கில் படிப்படியாக குறைந்து விடும்.

காலப்போக்கில் உங்களுடைய தீர்க்க முடியாத நோய் பிரச்சனை படிப்படியாக குறையும்.

நீங்கள் மருந்து சாப்பிடுவதை கேது பகவானே தவிர்த்து விடுவார்.

(ராகு காலத்தில் மருந்து மாத்திரையை சாப்பிட தொடங்கினால் அது, பல மடங்கு உயர்ந்துவிடும். இந்த இடத்தில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.)

இதிலும் குறிப்பாக எமகண்டமோ, ராகு கால நேரமோ முடியும் தருணத்தில் அந்த வேலையை செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு ஞாயிறு 12:00 லிருந்து 1:30 மணி வரை எம கண்ட காலம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த சமயத்தில் 1:15 முதல்1-30 நேரத்தில் நீங்கள் மருத்துவத்திற்கான செலவுகளை செய்வது உங்களது நோய் தீர அந்த மருந்து மாத்திரையை சாப்பிடும் வேலையை செய்தால் அது உங்களுக்கு அதிகப்படியான நன்மையை கொடுக்கும்.

காரணம் ராகுவும் கேதுவும் நமக்கு கெட்டது செய்தாலும், அவர்கள் விலகும் போது நமக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை கொடுத்து விடுவார்கள் என்பது ஜோதிடம் சொல்லும் குறிப்பாகும்.

நமக்கு வரக்கூடிய கஷ்டங்களில் இருந்து தப்பிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *