Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

ராகு தசை எந்த மாதிரியான பலனை கொடுக்கும்?

ராகு, சுயசாரம் வாங்கி அமர்ந்து,சுப அல்லது பாவத்தொடர்புகள் இல்லாத பட்சத்தில் ராகு தசை எந்த மாதிரியான பலனை கொடுக்கும்?
ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம்.
இந்த மூன்று நட்சத்திரங்களும் முறையே, மிதுனம் ,துலாம் ,கும்பம் இவற்றில் மட்டுமே அடங்கும்.
ராகு,இயற்கையில் எப்படி பார்த்தாலும் பாவ கிரகமே.
எந்த நிலையிலும் பாவ கிரகங்கள், தன்னுடைய தசையில், தன்னுடைய பாவ காரகங்களைத் தான், அதிகமாக வெளிப்படுத்தும்.
சுப கிரக தொடர்புகள் ஏற்படும் பட்சத்தில் , குறிப்பாக சுப கிரகத்தின் பார்வை பலத்தினை தான் , பாவ கிரகங்கள் பெற வேண்டும்.
சுப கிரகங்களின் இணைவைப் பெரும் பட்சத்தில், இணைவின் அளவைப் பொறுத்து , பாவ கிரகங்கள், சில நிலைகளில்,சுப கிரகத்தை வலுவிலக்கச் செய்துவிடும்.
உதாரணமாக மேஷத்தில் ராகு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
குருவின் மூலத்திரி கோண வீடான , தனுசில் குரு ஆட்சி பெற்று, அந்த ராகுவை பார்க்கும் பொழுது, ராகு திசை சிறப்பான பலன் செய்யும். (வீடு கொடுத்தவனின் நிலையையும் அறிக.) பாவ கிரக தொடர்பை பெறாத பட்சத்தில், ராகு திசை நிச்சயமாக நல்ல பலனே.
அதே நேரத்தில், மேசத்தில் ராகு , குருவுடன் நெருக்கமாக இணைந்தால், ராகு ஓரளவு சுபப்பட்டாலும், குரு திசை காலகட்டங்களில், குரு ஏதாவது ஒரு லக்னத்திற்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும் பட்சத்தில், உதாரணமாக விருச்சிக லக்னம் என்று வைத்துக் கொள்வோம் .
அந்த குரு, ராகுவால் கிரகணப்பட்ட அமைப்பில் இருக்கும் பட்சத்தில் , குரு திசையில் நல்ல பலனை, பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது.
கடந்த சில ஆண்டுகளாக, ஆராய்ந்ததில் ,ராகு சுயசாரத்தில் அமர்ந்து தசை நடக்கும் பட்சத்தில் எந்த மாதிரியான பலனை கொடுக்கிறது என்று பார்த்தோமேயானால், சுயசாரத்தைப் பெற்ற ராகு திசை பெரும்பாலான ஜாதகங்களில் , கெடு பலனைத் தான் செய்கிறது.
இதில் ராகுவிற்கு வீடு கொடுத்தவன், பகை வீட்டிற்குச் சென்றாலும், மறைந்தாலும், பாவ கிரக சம்மந்தம் ராகுவிற்கு கிடைத்தாலும் , சுய சாரம் பெற்ற ராகு திசை வச்சு செஞ்சு விடுகிறது.
மிக மிகக் கடுமையான, தாங்க முடியாத,துன்பங்களை அனுபவிக்கும் காலமாக, ராகு திசை உள்ளது.
இந்தப் பதிவு நான் ஆராய்ந்ததில் உணரப்பட்ட ஆராய்ச்சி பதிவு.
இதில் மாற்று கருத்து இருப்பவர்கள் உங்கள் கமெண்ட்களை பதிவு செய்யுங்கள்.

5 thoughts on “ராகு தசை எந்த மாதிரியான பலனை கொடுக்கும்?”

  1. Excellent analysis very knowledgeable want to know if rahu in gemini in jupiter star punarwasu 2nd house for Taurus
    And house lord mercury retro in aries with venus with mercury in pushakaramasa and with venus what results can you guide

  2. அய்யா எனக்கு october முதல் ராகு திசை ஆரம்பித்து உளளது. ஆயில்யம் நட்சத்திரம் கடக லக்னம். தினமும் உடலும் மனமும் சிரமப்பட்டு வருகின்றது. எதேனும் பரிகாரம் செல்லவும். நன்றி

  3. வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது போல் ராகு திசையில் அதிக பிரச்சனைகளை அவமானம் உடல் நலம் பாதிப்பு தொழில் பாதிப்பு எல்லாம் சந்தித்தோம் ராகுஅமர்ந்த அதிபதி ஆறில் மறைவு ராகு வாங்கிய சாரம் சனி பகவான் சாரம் அதுமில்லாமல் பாதகாதிபதி வீட்டில் வேறு இருந்தார் அருமையான பதிவு ஐயா நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *