2026 ராசிபலன்
மேஷம்:
2026 ஆம் ஆண்டில் சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் காலதாமதம் ஏற்படலாம். ஜாமீன் கொடுப்பது அடுத்தவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பது, மற்றவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பது, ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகவும் கவனமாக இருப்பது நன்மை தரும். துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பது மூலம் சாதகமான பலன் கிடைக்க கூடும். சகோதரர் வழியில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். அடுத்தவர்களிடம் பேசும் போதும் நிதானமாகவும் கவனமாகவும் பேசுவது நன்மையை தரும். தேவைக்கேற்ற நேரத்தில் எதிர்பார்த்த நிதி கிடைக்க கூடும். எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் போது கூடுதல் முயற்சியுடன் செய்தால் அதில் சாதகமான பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
2026 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்யம் மேம்படும். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நல்ல பலனே கிடைக்கும். சொத்து தொடர்பாக செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் நற்பலனே உண்டாகும். மேலும் சகோதரர் வழியில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். அவர்களால் உதவிகளும் கிடைக்க கூடும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். பணவரத்தில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் மற்றும் கடன் விவகாரங்களில் தாமதமான நிலை காணப்படும். அனைவரிடமும் அனுசரித்து பேசுவது மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் தேவை.
மிதுனம்:
2026 ஆம் ஆண்டில் வெளியூர், வெளிநாடு பயணங்கள் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான முடிவை எதிர்பார்க்கலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். கொடுக்கல் வாங்கல் மற்றும் முதலீடுகள் செய்வதில் கவனமாக இருப்பது நல்லது. வாக்குறுதிகள் கொடுப்பது, அடுத்தவர்களுக்காக ஜாமீன் தருவது, பொறுப்புகளை ஏற்பது ஆகியவற்றை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை நிமித்தமாக வேறு இடம் சென்று தங்க வேண்டி வரலாம். இதுவரை தாமதப்பட்ட பணிகளில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். வீண் செலவுகளை தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
கடகம்:
2026 ஆம் ஆண்டில் எடுத்த காரியம் வெற்றி பெற வழக்கதைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டாலும் கூடுதல் முயற்சி வெற்றி தரும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். அதிக பணியின் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். பயணங்களின் போதும், வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படலாம். தெய்வ சிந்தனை மேலோங்கும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரலாம். ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்க கூடும். பணி நிமித்தமாக இடமாற்றம் ஏற்படலாம். எந்த ஒருகாரியத்தையும் செய்ய முற்படும்போதும் அதனால் கிடைக்கும் பலன்களை ஆராய்ந்த பின் அதில் ஈடுபடுவது நல்லது.
சிம்மம்:
2026 ஆம் ஆண்டில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியாட்கள் மூலம் லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சாதகமான முடிவு கிடைக்க கூடும். இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றால் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். நிதி நிலை மேம்படும். வரவேண்டிய பணம் வரக்கூடும். அதிகாரம் செய்யும் அளவிலான உயர் பதவிகள் கிடைக்க கூடும். வாகனங்கள் வாங்குவது, விற்பது போன்றவற்றில் இருந்த தடை, தாமதங்கள் விலகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். மன குழப்பங்கள் நீங்கி மனோதைரியம் அதிகரிக்கும். நோய் நீங்கி ஆரோக்யம் மேம்படும்.
கன்னி:
2026 ஆம் ஆண்டில் வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில் வருமானத்திற்கு ஏற்ற செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். பண விஷயத்தில் அடுத்தவர்களை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக அலைச்சல் ஏற்படக்கூடும். பிறரை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைக்காமல் எதையும் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். உறவினர், நண்பர்களிடம் நிதானமாக பேசுவது மூலம் மன வருத்தங்கள் வராமல் தடுக்கலாம். மேலும் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
துலாம்:
2026 ஆம் ஆண்டில் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும். பணவரத்தில் இருந்த தடங்கல்கள் நீங்கும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நிதி நிலை சீரடையும். லாபம் அதிகரிக்க செய்யும் முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்தரும். தரும காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள். புத்துணர்வுடன் காரியங்களை செய்து முடித்து சாதகமான பலன்களை பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். கட்டுமான பணி போன்ற பாதியில் நிறுத்திய பணிகளை தொடர்ந்து செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள்.
விருச்சிகம்:
2026 ஆம் ஆண்டில் அடுத்தவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது காரிய அனுகூலத்தை தரும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நன்கு ஆலோசித்து கவனமாக செயல்படுவது அனுகூலமான பலன் தரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வீண் செலவுகளை தவிர்க்கலாம். கூடுதல் முயற்சி செய்வதன் மூலம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான நிதிவசதிகள் தாமதமாக கிடைக்க கூடும். வியாபார விரிவாக்கம் செய்வதில் நன்கு ஆலோசித்து செயல்படுவது நல்லது. வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்க கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். சொத்துக்கள் வாங்குவது, தனி நபரிடம் செய்யும் முதலீடுகள் போன்றவற்றில் கவனம் தேவை.
தனுசு:
2026 ஆம் ஆண்டில் தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள், உத்தியோகம் குறித்த விஷயங்களில் தாமதமான நிலை இருந்தாலும் கூடுதல் முயற்சிகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடும். உடல் ஆரோக்யம் மேம்படும். வாழ்க்கை துணை மூலம் நன்மைகளை பெறுவீர்கள். தொழில் வியாபார பார்ட்னர்கள் மூலம் இருந்துவந்த பிரச்சனைகள் தீர்ந்து அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டத்தினர் உங்களது நற்செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் அலைச்சல் இருந்தாலும் பலன் அனுகூலமானதாக இருக்கும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதைவிட நேரடியாக எதையும் கவனிப்பது வெற்றியை தரும். பொருளாதார நிலை உயர எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். வருமானம் கூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மகரம்:
2026 ஆம் ஆண்டில் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சுமுகமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதன் மூலம் மதிப்பும் மரியாதையும் கூடும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் அனுகூலமான பலன் தருவதாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் இருந்து வந்த தடை, தாமதம் நீங்கி அனுகூலமான பலன் உண்டாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் நிலை உருவாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செலவது நல்லது.மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறும் நிலை உருவாகும். உடல் ஆரோக்யம் மேம்படும். இதுவரை இருந்த பண கஷ்டங்கள், மன கஷ்டங்கள் விலகும். வருமானம் மேம்படும்.
கும்பம்:
2026 ஆம் ஆண்டில் புத்தி சாதுரியமும் அறிவு திறனும் அதிகரிப்பதுடன் அதனால் காரிய வெற்றியும் கிடைக்கும். கடினமான காரியமாக இருந்தாலும் அதனை திறம்பட செய்து முடிப்பீர்கள். பாதியில் விட்ட பணிகளை செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான விவகாரங்களில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்றவற்றில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பது, மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட்டு தீர்வு கூறுவது, போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. திறமையாக செயல்படுவது மூலம் நல்ல பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க கூடும். புதிய நட்பு மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
மீனம் :
2026 ஆம் ஆண்டில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி வரலாம். அதே நேரத்தில் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாதபடி தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்கள் பற்றிய வீண் பேச்சுக்கள், விமர்சனங்கள் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க கூடுதலாக முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். வாகனம் வாங்க விற்க எடுக்கும் முயற்சிகள் தாமதத்திற்கு பின் நடந்து முடியும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் இருக்கும். எதிர்பார்த்த பண வரத்து, பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய வருமானம் போன்றவை தேவையான நேரத்திற்கு வந்து சேரும். நற்சிந்தனையில் நாட்டம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பதில் ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை தரும்.