64 யோகினிகள்
புராண நூல்களின் செய்திகளின்படி,
இந்து மதத்தின் பொதுவான நம்பிக்கை என்னவென்றால்,
ஆதி பராசக்தி சதி எனும் உருவில் இருந்தபோது
அஷ்ட மாத்ரிகாஸ்
என அழைக்கப்படும் எட்டு பெண் தெய்வங்களை வெளிப்படுத்தினாள்.
புராதன மற்றும் ஆற்றல் மிக்க ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்ததும்,
மக்களுக்கு உயர்ந்த ஞானத்தை அடைய வழி காட்டும்
மற்றும்
தந்திர பள்ளிகளில் மேன்மையானதுமான
கௌல தந்திர
எனப்படும்
தந்திர நூலின்படி,
அந்த எட்டு அஷ்ட மாத்ரிகாஸ் என்பவர்கள்
பிராமணி,
வைஷ்ணவி,
மகேஸ்வரி,
இந்திராணி,
கௌமாரி,
வராஹி,
சாமுண்டா
மற்றும்
நரசிம்ஹி
என்பவர்கள் ஆவர்.
அஷ்ட மாத்ரிகாஸ்
ஒவ்வொருவரும் தத்தம் உடல்களில் இருந்து
தலா எட்டு தெய்வீக சக்திகளை
யோகினிகள் எனும் வடிவத்தில் வெளிக் கொண்டு வந்தனர்.
இப்படியாக மொத்தம் 64 தாந்த்ரீக யோகினிகள் வெளி வந்தார்கள்.
ஆலயங்களில் உள்ள மாத்ரிகாஸ் எத்தனை பேர் என்பதில் எப்போதுமே சில குழப்பங்கள் உள்ளன.
சில ஆலயங்களில் எட்டு மாத்ரிகாஸ் சிலைகளும்,
வேறு சில ஆலயங்களில் ஏழு மாத்ரிகாஸ் சிலைகளும் காணப்படுகின்றனர்.
இப்படியாக 64 யோகினிகள் வெளிவந்த அதே நேரத்தில்
தக்ஷ யாகத்தை அழிக்க
சிவபெருமான்
மூலம் வெளிவந்த மஹா காலபைரவர் மூலம் முதலில் எட்டு பைரவர்கள் வெளிவர,
அந்த எட்டு பைரவர்களும்
தத்தம் உடலில் இருந்து
தலா ஏழு பைரவர்களை வெளிப்படுத்த
(8+8×7=64),
இப்படியாக அங்கு வெளிவந்த 64 பைரவர்கள்
அனைவரும் தாந்த்ரீக கலைகளில் சிறந்து விளங்கிய
64 யோகினிகளை மணந்து கொண்டு அவர்களது துணைவர்கள் ஆயினர்.
அவர்கள் அனைவருமே
மஹா காலபைரவர் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
மஹா கலாபைரவர் மூலம் முதன் முதலில் தோன்றிய
எட்டு பைரவர்களின் பெயர்கள்
அசிதங்கா,
ருரு,
காண்டா,
க்ரோதா,
உன்மட்டா,
கபாலா,
பீசானா
மற்றும்
சம்ஹாரா
என்பன ஆகும்.
யோகினி என்றால்
‘ஒருங்கிணைந்த சக்தி’
அல்லது
ஒருமித்த சக்தியை வெளிப்படுத்தும் சக்தி
என்பதாக பொருள் கொள்ளலாம்.
அந்த 64 யோகினிகள் அனைவருமே
தனித்துவமான தன்மைகளைக் கொண்டவர்கள்.
அவர்கள் தம்மை தியானிக்கும் சாதகர்களது விருப்பங்களை நிறைவேற்றுபவர்கள்,
எதிர்மறை எண்ணங்கள்
மற்றும்
மன பயத்தை விரட்டும் தன்மை கொண்டவர்கள்,
துரதிஷ்டங்களைத் தடுப்பவர்கள்.
அறிவு,
அமைதி,
பல வகைகளிலான செழிப்பு,
நல்ல வம்சாவளி
மற்றும்
அனைத்து வகைகளிலான சுபங்களையும் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.
தாந்த்ரீக பாரம்பரியத்தில்
யோகினிகள் குழந்தை பாக்கியத்தை தரும் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.
அவர்கள் மந்திர தந்திரக் கலைகளை உள்ளடக்கியவர்கள்,
கருணை கொண்டவர்கள்
என்றாலும்
அதே நேரத்தில் கடுமையான கட்டுப்பாட்டுடன் ஆட்சி செய்பவர்கள் என்பதினால்
மேலும்
சிலரது பார்வையில் யோகினிகள் பேய்
அல்லது
சூனியக்காரி என்றும் பார்க்கப்படுகிறார்கள்.
64 யோகினிகள்
மற்றும்
அவற்றின் சக்திகள் பற்றிய குறிப்புகள் பண்டைய வேதங்களான
பிரம்மந்த புராணம்,
அக்னி புராணம்,
ஸ்கந்த புராணம்,
காளிக புராணம்,
நந்திகேஸ்வர புராணம்
மற்றும்
சரலா தாஸின் சாந்தி புராணம்
போன்ற பல நூல்களிலும் காணப்படுகின்றன.
தந்திர போதனையின் சிறந்த தந்திர நூல்களில் ஒன்றான
‘குலர்னவா’
எனும் நூல் மிக முக்கியமான நூல் ஆகும்.
அந்த தந்திர போதனை நூலில்
யோகினிகள்
மற்றும்
யோகினி சமயக் வழிபாட்டு முறை பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன.
அதை போலவே
கௌல தந்திர போதனா முறை பள்ளியை சேர்ந்த
குலஜ்ஞானநிர்ணய’
எனும் தாந்த்ரீக போதனா நூலும் யோகினிகள்
மற்றும்
அவர்களுடன் தொடர்புடைய வழிபாட்டு முறைகள் பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள் தருகின்றன.
அந்த நூலானது
மத்சியேந்திரநாத்
எனப்படும்
மச்ச முனிவரால்
இயற்றப்பட்டு உள்ளது.
அவர்
ஹடயோக கலை போதனையை துவக்கிய
கோரக்ஷநாத்
என்பவருடைய சீடர் ஆவார்.
‘கௌலஞானநிர்ணய’
எனும் தாந்த்ரீக போதனா நூலும்
யோகினிகளின் தாந்த்ரீக மகிமைகளை
விரிவாக விளக்கி உள்ளது.
அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள விவரங்கள்
அனைத்துமே வேண்டும் என்றே
பொது மனிதர்களுக்கு விளங்கிடாத வகையிலான
ரகசிய மொழியில் விளக்கப்பட்டு உள்ளன.
ஆகவே
அவற்றில் உள்ள போதனைகளை
தாந்த்ரீக தந்திர போதனைகளை
ஆழமாக பெற்று உள்ள குருக்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
🚩 64 யோகினிகள்
1. ஆனந்த யோகினி
2. அகில யோகினி
3. அனங்க குசா யோகினி
4. அனங்க மதனா யோகினி
5. அனங்க மேகலா
6. அனங்க வெதனா
7. அனங்க வேதி
8. அனக்க மோதினி
9. அமோகா
10. அமோக சித்தி
11. அருமதி
12. அரத் ரேகா
13. ஆதி மூலா
14. ஆதி சக்தி
15. இளம்பரணி
16. இந்திராணி
17. இந்திர கெளரி
18. உமா யோகினி
19. ஊர்த்தி காமினி
20. உர்மிலா
21. ஏகாம்பிகா
22. காளராத்திரி
23. காளிகா
24. காள யோகினி
25. கமல யோகினி
26. காமினி
27. கந்தாரி
28. காமரூபா
29. காமேஷ்வரி
30. குஸா யோகினி
31. குருகுலா
32. கேதாரி
33. கோமதி
34. கோவினி
35. சண்டிகா
36. சித்ரா
37. சந்திர யோகினி
38. சித்த யோகினி
39. ஜானவி
40. தடங்கினி
41. தனுதி
42. தாரா
43. துர்கா
44. திரிபுர சுந்தரி
45. தேவயானி
46. நந்தினி
47. நவ யோகினி
48. பத்மினி
49. பாட்டாள யோகினி
50. பால யோகினி
51. ப்ரத்யங்கிரா யோகினி
52. பவானி
53. பீஷணி
54. பிங்கலா
55. மகாமாயா (தலைவி)
56. மகேஸ்வரி
57. மார்கண்டா
58. மடங்கினி
59. மதுப்ரியா
60. மாயா யோகினி
61. மஹிஷி
62. மர்தினி
63. யோக பயங்கரி
64. யோக மகிஷி
👑 தலைவி
மகாமாயா யோகினி
பெரும்பாலான தந்திர மரபுகளில்
🪭“ 64 யோகினிகளின் தலைவி
முதல் சக்தி
(Mother of Yoginis”)
என்று கருதப்படுகிறார்.
பல பரம்பரைகளிலும் யோக பயங்கரி மிக உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்
ஆனால்
🪭 “மகா தலைவி”
என குறிப்பிடப்படுவது
மகாமாயா.