பஞ்சபூத நேரங்களும் பயன்படுத்தும் முறையும் 🙏
பஞ்சபூதங்களின் ஆளுமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமாக நமக்கு வரும். அதனை தெரிந்து கொண்டு நாம் பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை பகல் நேரத்தில்
காலை 6 – 8:24 ஆகாயம்
காலை 8:25 – 10.48 வாயு
காலை 10:49 – 1:12 நெருப்பு
பிற்பகல் 1:13 – 3:36 நீர்
பிற்பகல் 3:37 – 6:00 நிலம்
ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை இரவு நேரத்தில்
மாலை 6.00 – 8:24 நிலம்
இரவு 8:25 – 10:48 நீர்
இரவு 10:49 – 1:12 நெருப்பு
நள்ளிரவு 1:13 – 3:36 வாயு
நள்ளிரவு 3:37 – 6:00 ஆகாயம்
இந்த நேரத்தை எப்படி பயன்படுத்தலாம்?
தினமும் ஒவ்வொரு நேரத்தையும் இது தான் செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் பட்டியல் இட்டு வைத்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் நீங்கள் அதனை கடைபிடிக்கும் பொழுது உங்களின் வாழ்க்கை உயரும்.
அதிகாலை 3:37 மணி முதல் 6:00 மணி வரை
இது மிகவும் சாத்வீகமான நேரம். யாகம் செய்வதற்க்கு மற்றும் காயத்ரி மந்திரம் செய்வதற்க்கு உகந்த நேரம். பஞ்சபூதத்தில் ஆகாயத்தை குறிக்கும் நேரம் இது.
ஆகாயம் என்பது வெட்டவெளி. அமுதம் போன்ற நேரம் இது.
ஆத்மாவிற்க்கு பலத்தை அதிகப்படுத்தும் நேரம் இது. கண்டிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் தூங்ககூடாது.
தியானம செய்வதற்க்கு நல்ல நேரம் இதுதான். உங்களுக்கு நல்ல குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த நேரத்தில் உடல்உறவை வைத்துக்கொண்டால் நல்லது.
காலை 6:01 மணி முதல் 8:24 மணி வரை
காலை 6:00 மணிக்கு குளிர்ச்சியான நேரம். அஸ்திவாரக்கல் நாட்ட சிறப்பான நேரம். வீடு கட்ட அடிக்கல் நாட்டினால் குடியிருப்பவரின் மனம் குளிர்ந்து இருக்கும்.
இந்த நேரத்தில் நட்சத்திர தோஷம், திதி தோஷம், கிழமை தோஷம் எதுவும் கிடையாது,
தியானம் ,காயத்ரி ஜபம், ஆசனம், பிரணாயாமம் ஆகியன செய்ய உத்தம நேரம்.
காலை 8:25 மணி முதல் 10:48 மணி வரை
தான தர்மம் செய்வதற்க்கு இந்த நேரம் உகந்த�