Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

புலிப்பாணி சித்தரின் ஜோதிட பாடல்

  • by

புலிபாணி ஜோதிடம் 300

01.கடவுள் வாழ்த்து

சத்தியே தயாபரியே ஞானரூபி சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி முத்தியே வேதாந்தபரையே அம்மா முக்குணமே முச்சுடரே மாயாவீரி வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற வேணிகையே சாமளையே பொன்னேமின்னே சித்திடையே சோதிடமும் முனனுரையா சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.

விளக்கம்
ஆதிசக்தி கருணை வடிவானவளே ஞான வடிவானவளே ஜம்புகேஸ்வரரின் மனதில் உகந்த சாம்பவி மனதிற்கு மகிழ்ச்சி தரும் சிந்தாமணி போன்ற அன்னையே கபாலையே சூலியே மூவுலகோர்க்கும் முக்தி அருளும் வேத முதலானவளே முடிவானவளே தாயே சத்வ ராட்சச தாமச ஆகிய முக்கோண வடிவானவனே அக்னி சூரியன் சந்திரன் ஆகிய மூச்சுடர் ஆனவளே மாயை வடிவானவளே வீரமுடையவளே பிரம்மன் அயன் அரண் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றிலை நகவல்ல அருள் வடிவாய் சரஸ்வதி லட்சுமி பார்வதி என்று எவ்வுலகம் பரவி இருக்கும் பராசக்தியே உந்தன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடன் சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசன் அது அருளால் இந்நூலை படைக்கின்றேன் அவர் என்றும் என் துணை இருப்பாராக புலிப்பாணி சித்தர் இந்த பாடலின் மூலம் ஜோதிடம் பயில்பவரும் சொல்பவரும் அன்னை பராசக்தியின் அருளைப் பெற அவளை ஏதாவது ஒரு ரூபத்தில் வணங்கி வழிபட வேண்டும் அன்னையின் அருளைப் பெறாமல் ஜோதிடராக முடியாது என்று புலிப்பாணி சித்தர் விளக்குகின்றார்

 

 

2 - சக்தி வழிபாடு:

பாடல் 3 - சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்

தானென்ற சூரியனுக்காட்சி சிங்கத் தன்மையுள்ள மேஷமது உச்சமாகும் தானென்ற துலாமதுவும் நீசமாகும் தனியான தனுவுட னே மீனம் நட்பாம் மானென்ற மற்றேழு ராசிதானும் வரும் பகையா மென்றுனக்கு சாற்றினோம்யாம் கோனென்ற போகருட கடாட்சத்தாலே குணமான புலிப்பானி குறித்திட்டேனே

பாடல் 3க்குரிய விளக்கம்

நவகிரக நாயகனான சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும் மேஷம் உச்சவிடும் துலாம் நீச்சமாகும். தனித்தன்மை பெற்ற தனுசுடன் மீனம் நட்பாகும் மற்ற 7 ராசிகளான ரிஷபம் மிதுனம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம், கும்பம் ஆகிய அனைத்தும் சூரியனுக்கு பகை விடுகலாகும். தன்னிகரில்லாத குருநாதரான போகிறது கருணையாலே எமது கருத்துக்களை உரைத்தேன் என்பதால் இந்த பாடலின் பொருள்

பாடல் 3 - சூரியனின்
ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள்

பாடல் 4 - சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்

ஆட்சி உச்சம் பகை நீச்சம் சந்திரன் பாரப்பா சந்திரனுக் காட்சிநண்டு பாங்கான விடைய துவே உச்சமாகும் வீரப்பா வீருச்சிகமும் நீசமாகும் விருது பெற்றதனுமீனம் கன்னி நட்பு ஆரப்பா அறிவார்கள் மற்றாறு ராசி அருளில்லாப் பகையதுவே யாகும்பாரு கூறப்பா கிரகம் நின்ற நிலையைப் பார்த்து குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேனே.

பாடல் 04 க்குரிய விளக்கம்

நவ நாயகர்களில் ஒரு வரான சந்திர பகவானுக்கு கடகம் ஆட்சி வீடாகும் ரிஷபம் உச்சவிடும் கொண்ட விருச்சிகம் அதற்கு நீச விடாகும் தனுசு மீனம் கன்னி ஆகிய மூன்றும் சந்திரனுக்கு நட்பு விடுகலாகும் மற்ற ஆறு ராசிகளும் மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் மகரம், கும்பம் அதற்கு சந்திரனுக்கு பகைவீடுகள் ஆகும் கிரகங்கள் நின்ற நிலையை நன்றாக ஆராய்ந்து பார்த்து அவற்றின் பலாபலன்களை கூற வேண்டும் என்று புலிப்பாணி சித்தர் கூறுகின்றார்

பாடல் 4 - சந்திரனின் ஆட்சி
, உச்ச, நீச்ச, நட்பு மற்றும்
பகை வீடுகள்

பாடல் 5 - செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்

கேளப்பா செவ்வாய்க்கு மேஷம் தேளும்

நாளப்பா மகரமது உச்சமாகும்

கெணிதமுட னாட்சியது வாகும்பாரு நலமில்லா நீசமது கடகமாகும் தாளப்பா தனுமீனம் ரிஷபம் கும்பம் தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம் பாளப்பா கால்சிங்கம் பகையாமென்று பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே

பாடல் 05 க்குரிய விளக்கம்

நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு மேஷமும் விருச்சிகமும் ஆட்சி வீடுகள் ஆகும் சனியின் வீடான மகரம் உச்சம் ஆகும் கடகம் நீச வீடாகும் தனுசு மீனம் ரிஷபம் கும்பம் ஆகிய நான்குடன் கண்ணியும் மிதுனமும் செவ்வாய்க்கு நட்பு விடுதல் ஆகும் துலாமும் சிம்மமும் பகை வீடாகும் என்று போகர் எனக்கு சொன்னதை உரைத்திட்டேன் என்று புலிப்பாணி சித்தர் கூறுகின்றார்

.

செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள்

பாடல் 6-புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்:

தானென்ற புதனுக்கு மிதுனமாட்சி தன்மையுள்ள கன்னியது மாட்சி உச்சம்

மானென்ற மீனமது நீசமாகும் மனிதரிலாம் கடகமது பகையாமென்று

வானென்ற மற்றேழு ராசிதானும் வகையான நட்பென்று வாழ்த்தினோம்யாம்

நானென்ற போகருட கடாக்ஷத்தாலே நவக்கிரக நிலையறிவாய் நன்மைதானே

பாடல் 06 க்குரிய விளக்கம்

தன் நிகரற்ற புதனுக்கு மிதுனம் ஆட்சி வீடாகும் தன்மை உள்ள கண்ணியது ஆட்சி வீடும் உச்சமிடும் மீனம் புதனுக்கு நீச விட ஆகும் மேலும் கடகம் சிம்மம் ஆகிய இரண்டும் புதனுக்கு பகை விடும் மற்ற ஏழு ராசிகளும் புதனுக்கு நட்பு விடுதல் என்று எமது குருநாதரான போகரின் அருளினாலே வாழ்த்தினோம். இருப்பினும் நவகிரக நிலை அறிந்து பலம் கூறுவது நல்லது என உரைத்திட்டேன். என்று புலிப்பாணி சித்தர் கூறுகின்றார்

புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள்

பாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு

உண்மையுடன் தனுமீன மிரண்டேயாகும் காமென்ற கற்கடகம் உச்சமாகும் கனமில்லா மகரமது நீச்ச வீடாம் போமென்ற விருச்சிகமும் பகையதாகும் புகழ்பெற்ற மற்றேழு ராசிநட்பாம் நாமென்ற போகருட கடாக்ஷத்தாலே நயமாக புலிப்பாணி நவின்றிட்டேனே.

பாடல் 07 க்குரிய விளக்கம்
ஓம் என்ற பிரணவ பொருளாக விளங்கும் வியாழ பகவானுக்கு தனுசுவும் மீனமும் ஆட்சி வீடுகள் ஆகும் கற்கடகம் அதற்கு உச்ச வீடாகும் மகரம் அதன் நீச்ச வீடாகும் விருச்சிகம் அதற்கு பகை வீடாகும் மற்ற ஏழு ராசிகளும் மேஷம் ரிஷபம், மிதுனம் சிம்மம் கண்ணீர் துலாம் கும்பம் குரு பகவானுக்கு நட்பு வீடுகள் ஆகும் என்று போகருடைய கருணையால் புலிப்பாணியாகிய நான் நயமாக உரைத்திட்டேனே

வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள் ஓமென்ற
வியாழனுக்கு ஆட்சிகேளு

பாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்

கேளப்பா சுக்கிரனுக் கெருதுகோலும் கெணிதமுடனாட்சியது உச்சம்மீனம் வாளப்பா கோதையவள் நீச்சமாவாள் வகையில்லா சிங்கமுடன் விருச்சிகந்தாள் ஆளப்பா பகையதுவே யாகும் ஆறும் அளவில்லா நட்பென்றே யறைந்தவாறு மாளப்பா பகையதுவே யாகும் ஆறும் மார்க்கமுடன் புலிப்பாணி யறிவித்தேனே.

நவ நாயகர்கள் ஒருவரான சுக்கிர பகவானுக்கு ரிஷபமும் துலாமும் ஆட்சி விடுகலாகும். மீனம் அதன் உச்ச வீடாகும் கன்னி அதன் நீச்சவீராகும் சிம்மம் விருச்சகம் ஆகிய இரண்டும் சுக்கிரனுக்கு பகைவீடுகள் என்றும் மற்ற ஆறு வீடுகளும் மேஷம் மிதுனம் கடகம் தனுசு மகரம், கும்பம் அதற்கு நட்பு என்றும் நயமாக எடுத்துரைத்தேன். இதுவே நன்மார்க்க வழி என்றும் புலிப்பாணி பாடினேன் என்பதாம்

சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள்

பாடல் 9 - சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்புமற்றும் பகை வீடுகள்

தேனென்ற சனி தனக்கு மகரம்கும்பம்

தெகிட்டாத ஆட்சியது உச்சம்கோலாம் மானென்ற மேஷமது நீசம்மற்ற

மற்கடக சிம்மமொடு விருச்சிகந்தான் ஊனென்ற வீண்பகையாம் மற்றோரைந்தும் உள்ளபடி நட்பாகு முடவனுக்கே கோனென்ற குருவருளாம் கடாட்சத்தாலே கொற்றவனே புலிப்பாணி கூறினேனே.

பாடல் 09 க்குரிய விளக்கம்

தேன் போல இனிமையான நல்ல பலன்களை அள்ளி வழங்கும் சனிபகவானுக்கு மகரமும் கும்பமும் ஆட்சி விடுகலாகும். துலாம் அதன் உச்ச வீடாகும் மேஷம் அதன் நீச்ச வீடாகும் மேலும் கடகம் சிம்மம் விருச்சகம் ஆகிய மூன்றும் சனிபகவானுக்கு துன்பம் தருகின்ற பகைவீடுகள் ஆகும் மீதி உள்ள ஐந்து வீடுகளும் மீனம் ரிஷபம் மிதுனம் கன்னி தனுசு ஆகியவை சனிக்கு நட்பு விடுதலாகும் எமது குருநாதனாகிய போகருடைய கருணையாலே நயமாக புலிப்பாணி பாடினேன் என்பதாம்

சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்புமற்றும் பகை வீடுகள்

பாடல் 10 -ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்

பாரப்பா ராகுடனே கேதுவுக்கும் பாங்கான விடதுவே கும்பமாட்சி வீரப்பா விருச்சிகமும் சுடகம் உச்சம் வீறுடைய ரிஷபமது நீச்சமசிம்மம் காரப்பா பகையாகும் மற்றேழ்நட்பாம் காண்பதுவும் முன்றுபதி னொன்றாம் சொல்வார் ஆரப்பா போகருட கடாட்சத்தாலே அப்பனே புலிப்பாணி அறிவித்தனே.

பாடல் 10க்குரிய விளக்கம்
ராகு கேது ஆகிய இருவருக்கும் நன்மை தரக்கூடிய ஆட்சி வீடு கும்பம் ஆகும் விருச்சகம் கடகம் ஆகிய இரண்டும் மேற்கூறிய இருவருக்கும் உச்சவீராகும் ரிஷபம் இவர்களுக்கு நீச்ச விட ஆகும் சிம்மம் இவர்களுக்கு பகை என்றும் மற்ற ஏழு வீடுகளும் மேஷம் மிதுனம் கன்னி துலாம், தனுசு மகரம், மீனம் இவர்களுக்கு நட்பு வீடு என்றும் போகருடைய கருணையால் புலிப்பாணி பாடினேன் என்பதாம்

ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச,
நட்பு மற்றும் பகை வீடுகள்

பன்னிரண்டு பாவங்களின் காரகத்துவம்

1. முதலாம் பாவ காரகத்துவம் 2

சீர்மலி முதற் பாகத்தின் பலன் றான் சித்தி தங்கிலேச மெய்சொரூபம் பேர் மலிவயதும் பகர் தனுத்தானம் பெருநிதி கீர்த்தி மூர்த்திகளும் ஏர்மலிசு பந்தோஷ நிறமும் மிலக்கணமு பாங்கமே முதலாம் தார்மலி போகர் தாளினை வணங்கிச் சாற்றினேன் புலிப்பாணிதானே

பாடல் 11 க்குரிய விளக்கம்

சிறப்பு வாய்ந்த முதலாம் பாவத்தைக் கொண்டு ஒரு ஜாதகரின் வடிவத்தையும் வயதையும் தனம் சம்பந்தமான விஷயங்களையும் பெரு நிதியையும் புகழ் கீர்த்தி முதலாம் அம்சங்களையும் அவரின் குணம் நிறம் மாறான வெற்றியும் தெரிந்து கொள்ளலாம் எனது குருநாதர் ஆகிய போகரின் தாளினை பணிந்து முதலாம் பாவத்தின் காரகத்துவ விவரங்களை கூறினேன் என்பதாம்

முதலாம் பாவ காரகத்துவம்

இரண்டாம் பாவ காரகத்துவம்

தானமிகு ரெண்டிடத்தின் பெயரைக் கேளு தனம் குடும்ப மொளிசெறி நேத்திரமும் வித்தை ஈனமிலாச் செல்வமுடன் சாஸ்திர வாக்கு இரும் பொன்னு முபதேச மியம்பு கேள்வி மானமிகு சவுபாக்கியங் கமனம் புத்தி மற்றுமுள்ள நவரெத்தின வகையின் பேதம் ஊனமிலா யிவை பார்த்து முணர்த்துமென்று உரைத்திட்டேன் புலிப்பாணி உறுதியாமே!

பாடல் 12க்குரிய விளக்கம்

சிறப்பு வாய்ந்த இரண்டாம் பாவத்தைக் கொண்டு தனம் குடும்பம் ஒளி மிகுந்த நேத்திரம் வித்தை செல்வம் சாஸ்திர ஞானம் வாக்குச் சுத்தம் சொல் வன்மை சிறப்புமிகு பொன்சேர்க்கை உபதேசம் கேள்வி சௌபாக்கியம் புத்தி மற்றும் நவரத்தின பணிகளின் குற்றம் குறைகளை பற்றி அறிந்து உரைக்கும் குற்றமில்லாத பானம் என்று உறுதியாக புலிப்பாணி பாடினேன் என்பதாம்

இரண்டாம் பாவ காரகத்துவம்

பாடல் 13 – மூன்றாம் பாவம்

ஆனமூன்றா மிடத்தினரும்பலன் மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும் தானயோகந் தயிரியஞ்சோதரர் ஈனவேலை இருங்கலன் வீரமே.

 

பாடல் 13க்குரிய விளக்கம்

மூன்றாம் பாவத்தைக் கொண்டு ஒரு மனிதனின் மானம் வீரம் உயர்ந்த மனிதர்களின் நட்புறவு தானத்தில் ஈடுபாடு கொள்ளும் யோகம் இளைய சகோதரர்கள் ஈன வேளையில் வீரத்துடன் செயல்படும் தன்மை முதலான அம்சங்களை அறியலாம்

மூன்றாம் பாவம்
மூன்றாம் பாவம்

பாடல் 15 – ஆறாம் பாவம்(Song 15):

ஆறா மிடத்தின் னதுபலன் றானப்பா ஆயுதத்தால் ரணஞ்சொல்லு ஞாதிதுன்பம் விரான யுத்தமொடு திரவியநஷ்டம் மிகுதிருடர் ஜலமடந்தை விளையுஞ்சோர்வும்: கூறான மெய்வாதை பெண்ணால்கண்டம் கூடுமேபெரும்பாலும் நோயுமென்று பேரான சிறைச்சாலை கிட்டுமென்று பேசினேன் புலிப்பாணி பிரியத்தோட

 

பாடல் 15க்குரிய விளக்கம்

ஆறாம் பாவத்தைக் கொண்டு ஆயுதத்தால் ஏற்படும் அபாயம் தாயாதிகளால் ஏற்படும் துன்பம், யுத்த பயம் திரவிய நஷ்டம் திருடர்களால் ஏற்படும் தொல்லை ஜலகண்டம் பெண்களால் தொல்லை செய்வினை கோளாறால் மனம் வருந்தி காணப்படுதல் உடல் உபாதை பெண்ணால் ஏற்படும் கெண்டாது தோஷங்கள் நோய் தொல்லை சிறைவாசம் செல்லுதல் முதலான அம்சங்களை அறியலாம் என்று புலிப்பாணி பாடினேன்

ஆறாம் பாவம்

பாடல் 16 – ஏழாம் பாவம்(Song 16):

சப்தமத்தின் பலன்கேளு மணமதாகும் தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமினபம் சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார் அபிமானமரசரது சேர்சன்மானம் தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய் சதிருடனே தான் வந்து சேருமென்று கொத்தாக நீயறிந்து கூறுவாயேல் குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.

 

பாடல் 16க்குரிய விளக்கம்

சப்தஸ்தானமான ஏழாம் இடத்தைக் கொண்டு திருமண விஷயம் கலத்திரம் புத்திர சௌக்கியம் சுற்றுலா உறவினரை அதிகரித்தலும் அவர்களது அபிமானம் ஏற்படுதலும் அரச சன்மானம் கயல்விழி மாதர்களின் சேர்க்கை தானாகவே வந்து சேர்தல் முதலான அம்சங்களை ஆராய்ந்து கூறலாம் என குருவருளால் சொன்ன வாக்கியம் தப்பாது என்பது புலிப்பாணி முனிவரின் கருத்தாகும்

ஏழாம் பாவம்

பாடல் 17 எட்டாம் பாவம்(Song 17):

அஷ்டமயோக மரும்பிணி சண்டையும் நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும் துஷ்டடம்பமும் துன்றுமலையேறி கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே

 

பாடல் 17க்குரிய விளக்கம்

எட்டாம் பாவம் அஷ்டமஸ்தானம் என்று அழைக்கப்படும் அஷ்டம பாவத்தைக் கொண்டு தீராத நோய் தொல்லை சண்டை சச்சரவு நஷ்டம் மனக்கலேஷம் பகை ஏற்படுதல் மரணம் துஷ்ட தனம் வீண்தம்பம் மலை மீது ஏறி மிகுந்த துன்பம் அடைந்து கீழே விழுதல் முதலான அம்சங்களை அறியலாம்

எட்டாம் பாவம்

பாடல் 18 – ஒனபதாம் பாவம்(Song 18):

ஒன்பதாம்பல னாகுமுபதேச மின்பகூப மிகும் பணிகூபமும் வன்வதான பரியும் வளப்பமும் தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்

 

பாடல் 18க்குரிய விளக்கம்

ஒன்பதாம் பாவத்தைக் கொண்டு ஞான உபதேசம் பெறுதல் இன்பம் பெறுதல் பனி ஆட்களால் நன்மை ஏற்படுதல் அன்பு கருணை இறக்கம் போன்ற நற்பண்புகள் ஏற்படுதல் பறிபோன்ற வாகன செயற்கை ஏற்படுதல். நல்ல செழிப்பு தான தர்மங்களில் ஈடுபாடு பெரும் தனம் கிடைத்தல் முதலான அம்சங்களை அறியலாம்

ஒன்பதாம் பாவம்

பாடல் 19 – பத்தாம் பாவம்(Song 19):

பத்தாகு மிடத்தினது பலனைக்கேளு பட்டணங்கள் தாபித்தல் பலங்களோடு வித்தான பலபுண்ணியந் தேசாபிமானம் வீறான அரசனொடு கருமம் ஞானம் சித்தமதி லிரக்கமிகு தெய்வபக்தி சேருகின் றசவுரியமுங் கொப்பமூணும் நத்துகின்ற பூசையோடு மனைவிசேர்க்கை நலமாக விப்பலனை நவிலுவாயே.

 

பாடல் 19க்குரிய விளக்கம்

பத்தாம் இடத்தைக் கொண்டு பட்டணங்கள் ஸ்தாபித்தல் தைரியமாக பல புண்ணிய காரியங்கள் செய்தல் தேச விமானம் வீரமுள்ள அரசரோடு நட்புறவு கொல்லுதல் கர்மம் ஞானம் இறக்க சிந்தனை தெய்வ பக்தி சிறந்த சவுகரியம் கர்ப்பம் தரித்தல் நல்ல பூஜை காரியங்களில் ஈடுபடுதல் மனைவியுடன் சேர்க்கை முதலான அம்சங்களை அறியலாம்

பத்தாம் பாவம்

பாடல் 20 – பதினோராம் பாவம்(song 20):

பத்தின்மேலொன்றாகும் பலனைநன்றாய் பகருகிறேன் பயிர் வளப்பம் பரிநல்வேழம் வித்தைமிகு லாபங்கல் லறிவுசேர்க்கை மிகுமனதிற்றூக்கமொடு சிவிகைசேரும் உத்தரியஞ் செறிந்தபசும் பொன்னையொத்த உயர்மனைவி யோகமது முதலாயுள்ள மெத்தவே நீயறிந்து விளம்புவாயேல் வேதமா யுன்வார்த்தை விரும்புவாரே

 

பாடல் 20க்குரிய விளக்கம்

பதினொன்றாம் பாவத்தைக் கொண்டு விவசாய அபிவிருத்தி ஏற்படுதல் யானை குதிரை போன்ற வாகன சேர்க்கை வித்தை லாபம் அறிவு வளர்ச்சி ஏற்படுதல் மனதில் ஊக்கம் ஏற்படுதல் சிவிக யோகம் ஏற்படுதல் நற்குணமுடைய பசும்பொன் போன்ற அழகான மனைவி அடைதல் முதலான அம்சங்களை அறியலாம் இந்த மாதிரியாக நன்றாக ஆராய்ந்து பலன் கூறினால் உன்னுடைய வார்த்தையை இப்புவியில் உள்ளோர் வேதவாக்காக மதிப்பார்கள் என்பது புலிப்பாணி முனிவரின் கருத்தாகும்

பதினோராம் பாவம்

பாடல் 21 – பன்னிரண்டாம் பாவம்(Song 21);

பத்தின்மேல் இரண்டாகும் பெயரைக்கேளு பரதேச வுத்தியோகம் பணத்தின்சோர்வு சத்தான பலியோக சயனம் தியாகம் தர்மமொடு கர்மபலன் சவுக்கியமாக வித்தான பலபுண்ணிய விவாதமோடு விளைந்திடுமே தொழிலான பலதானங்கள் கத்தாதே போகருட கருணையாலே கரைந்திட்டேன் புலிப்பாணி கருத்தைத்தானே.

 

பாடல் 21க்குரிய விளக்கம்

பனிரெண்டாம் பாவத்தைக் கொண்டு பரதேச வாசம் உத்தியோகம், பணத்தால் ஏற்படும் சோர்வு பல யோகங்கள் வாய்த்தல் சயன சுகம் தியானம் தர்மம் கர்மபலன் பல புண்ணியம் சம்பந்தமான விவாதத்தால் வல்லமை ஏற்படக்கூடிய தொழில்கள் அமைதல் முதலான அம்சங்களை அறியலாம் போகருடைய கருணையாலே புலிப்பாணி பாடினேன் என்பதாம்

பன்னிரண்டாம் பாவம்

பாடல் 22 –

சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன் சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்பு ஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே அடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும் வாதியென் ஞானியும் பலவாறாக வையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாக சாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டி சமர்த்தாகப் பலன் சொல்லும் குறியைக்கேளே.

 

பாடல் 22க்குரிய விளக்கம்

ஜோதி வடிவான குருவும் சுக்கிரன் நீலன் சனி ஒளி வீசுகின்ற சூரியனும் சந்திரனும் செவ்வாய் கிரகமும் இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவ கோள்களையும் ராசி மண்டலமான பன்னிரு ராசிக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப் பிழம்பான இறைவன் இது குறித்து வாதிட்டு கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறி வைத்துள்ளார்கள் எனவே ஒருவன் தன் ஜென்ம ஜாதகம் குறித்து கேட்க வருவானேல் அவனுக்கு சாதகத்தை கூறும் சமர்த்தான முறையினை கூறுகின்றேன் எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையை கேட்பாய்

பாடல் 22

பாடல் 23.பன்னிரண்டு லக்கின பலாபலன்கள்

1. மேஷ லக்கின பலன்கள்

கேளப்பா மேடத்தில் செனித்த பேர்க்கு கெடுதி மெத்த செய்வனடா கதிரோன் பிள்ளை ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால் அவன் விதியுங் குறையுமடா அன்பாய்க்கேளு கூறப்பா கோணத்திலிருக்க நன்று கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா தானப்பா போகருட கடாக்ஷத்தாலே தனவானாய் வாழ்ந்திருப்பன் திசையிற் சொல்லே.

 

பாடல் 23க்குரிய விளக்கம்

மேஷ லக்னத்தில் ஜனனமான ஜாதகருக்கு சூரியனுடைய மகனான சனி பகவான் மிகுந்த துன்பத்தை தருவான் அவ்வாறு இல்லாத சனி பகவான் இந்த ஜாதகருக்கு வீடும் பொருளும் நில புலன்களும் தந்தால் அவனுடைய ஆயுள் காலம் குறைந்து போகும் மேலும் சனி பகவான் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அந்த ஜாதகருக்கு நல்ல யோக பலன்கள் உண்டாகும் இதற்கு மாறாக 1.4.7.10 என்னும் கேந்திர ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு கெடுதியான பலன்களை உண்டாகும் போக முனிவரின் கருணையால் இந்த ஜாதகர் ஒரு பெரிய தனவந்தனாக வாழவும் இடம் உண்டு சனி திசை வலுவாக இருந்தால் இந்த நற்பலன் கைகூடி வரும் என கூறுவாயாக

மேஷ லக்கின பலன்கள்

பாடல் 24 – ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்(Song 24):

சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.

அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம் தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு குள்ளப்பா குருமதியுங் கோணமேற கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே

 

பாடல் 24க்குரிய விளக்கம்

அன்பனே ரிஷப மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல சுகமும் சௌக்கியமும் உண்டாகும் என்று கூறுவாயே மேலும் அந்தணர் என்று அழைக்கப்படும் குரு பகவான் 1,4,7,10 என்னும் கேந்திர ஸ்தானங்களில் நின்றால் அவரால் ஏற்படும் தீய பலன்கள் மிகவும் அதிகமாக இருக்கும் அதாவது பூமி பொருள் தனம் யாவும் நாசம் அடையும் மேலும் பூமி ஆளும் அரசர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் இந்த ஜாதகர்களுக்கு அரிஷ்ட தோஷமும் ஏற்படக்கூடும் ஆனால் குரு பகவானும் சந்திரனும் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் இந்த பாலகனுக்கு பல வகையான நன்மைகள் உண்டாகும் என்று கூறுவாயாக

ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்

பாடல் 25 கடக இலக்கின ஜாதகர்

கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்து நிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே

 

பாடல் 25க்குரிய விளக்கம்

கடக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு சுக்கிர பகவான் மிகுதியான தீய பலன்களை தருவார் அதாவது யாராலும் வெல்ல முடியாத ராவணனின் மகனான இந்திரஜித் இந்த சுக்ராச்சாரியால் மரணம் அடைய நேர்ந்தது என்பதை அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த சுக்கிரன் 1,5,9, என்னும் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபெருமானின் அருளால் இந்த ஜாதகருக்கு செம்பொன்னும் ரதம் போன்ற வாகன யோகமும் கைகூடிவரும் என்று கூறுவாயே மேற்கூறிய சுக்கிரன் மற்ற இடங்களில் நின்றால் தீய பலன்களை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த ஜாதகரின் கிரக நிலை தசா புத்திகளின் வலிமைகளை நன்றாக ஆராய்ந்து தெளிந்து கூறுவது நல்லது என்பது புலிப்பாணி முனிவரின் கருத்தாகும்

கடக லக்னத்தில்

பாடல் 26 – சிம்ம இலக்கின ஜாதகர்(Song 26):

பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு பவுமனுமே திரிகோண மேறிநிற்க சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம் கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.

 

பாடல் 26க்குரிய விளக்கம்

சிம்ம லக்கனத்தில் ஜனனமான ஜாதகருக்கு செவ்வாய் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அந்த ஜாதகருக்கு நல்ல யோக பலன்கள் உண்டாகும் அதாவது செம்பொன் சேர்க்கை முதலான நல்ல யோக பலன்கள் ஏற்படும் ஆனால் இந்த செவ்வாய் திரிகோணம் தவிர மற்ற ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு துன்பமும் கஷ்டமும் வந்து சேரும் எனது குருவாகிய போக முனிவரின் அருளால் கூறினேன் இந்த பலன் தப்பாது பலிதமாகும் என்பதாம்

சிம்ம இலக்கின ஜாதகர்

பாடல் 27 கன்னி லக்கின பலன்கள்

குறித்திட்டேன் கன்னியிலே உதித்த பேருக்கு குற்றம் வந்து நேருமடா குருவினாலே பரித்திட்டேன் பண்டு பொருளும் நிலமும் சேதம் பகருகின்ற குருமதியும் கோணமேற சிரித்திட்டேன் ஜென்மனுக்கு வேட்டல் உண்டு செந் திருமால் தேவியுமே பாதையில் வாழும் குறித்ததொரு மனிதனிலே தெய்வம் உண்டு குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே

 

பாடல் 27 க்குரிய விளக்கம்

கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு குரு பகவானால் மிகுந்த துன்பம் வந்து சேரும் என்பது உண்மையாகும் அதாவது பூர்வீக சொத்து நாசமும் நிலத்தில் போதிய வருமானம் இல்லாத நஷ்டமும் வந்து சேரும் எனலாம் ஆனால் குரு பகவானும் சந்திரனும் 1 5 9 என்னும் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அந்த ஜாதகருக்கு நல்ல யோக பலன்கள் உண்டாகும் என்பது உண்மையே அதாவது இவரது இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் இவருடைய இல்லம் பலவிதமான வசதிகளுடன் நல்ல செழிப்புடன் திகழும் என அறிய வேண்டும் மேலும் இவருடைய இல்லத்தில் தெய்வம் வாழும் இதனால் இவருடைய குடும்பத்துக்கு குற்றம் குறை ஏதும் ஏற்படாது என போக முனிவரின் அருளால் புலிப்பாணி பாடினேன் என்பதாம்

கன்னி லக்கின பலன்கள்

பாடல் 28 – துலாம் இலக்கின ஜாதகர்(Song 28):

கூறினேன் கோலுட வில்லு மாகில் கொற்றவனே கதிரவனும் கோணமேற சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு மாறினேன் மற்றவிடந் தன்னில் நிற்க மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே திடமான புலிப்பாணி தெரிவித்தேனே

எம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான 1,5. நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட் யும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திச தொல்லை தருவனவேயாகும் இதுவே என் குருநாதர் போகரது அருட்கரு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெறஎடுத்துச்சொன்னேன்

 

பாடல் 28 க்குரிய விளக்கம்

துலாம் லக்னத்தில் ஜனனமான ஜாதகர்க்கு சூரிய பகவான் 1 5 9 என்னும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல ராஜயோக பலன்கள் உண்டாகும் சிவ பதவியும் இவருக்கு கிடைக்கும் என திடமாக கூறுவாயாக மேற்கூறிய சூரிய பகவான் மற்ற ஸ்தானங்களில் நின்றால் அவரது தசா புத்தி காலங்களில் மிகவும் கொடூரமான தீய பலன்கள் உண்டாகும் என்று எனது குருநாதரின் அருளால் ஆராய்ந்து தெளிந்து திடமாக சொன்னேன் என்பது புலிப்பாணி சித்தரின் விளக்கமாகும்

துலாம் இலக்கின ஜாதகர்

பாடல் 29 விருச்சிக லக்கின பலன்கள்

தெரிவித்தேன் தேளின் இல்லம் ஜென்மம் தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேர நன்று
அறிவித்தேன் அகம் பொருளும் அடிமை செம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனி வாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும் பலனை குறித்து சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாட்சத்தாலே
தேர்ந்து நீ புலிப்பாணி நூலைப் பாரே

 

பாடல் 29 க்குரிய விளக்கம்

தேள் சின்னம் கொண்ட விருச்சிக லக்ன ஜாதகர்க்கு யோக நாதன் ஆகிய சந்திர பகவான் 1 5 9 என்னும் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு நல்ல யோக பலன்கள் உண்டாகும் அதாவது இந்த அமைப்பால் பொன்னாபரண சேர்க்கையும் அடிமை ஆட்கள் வந்து தேர்தலும் மிகுதியான பொருள் சேர்க்கையும் ஏற்பட்டு இவர் சிறப்பாக வாழ்வார் என கூறுவாயாக ஆனால் 1,4, 7 10 என்னும் கேந்திர ஸ்தானங்களில் மேற்கூறிய சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு மிகவும் கெடுதியான தீய பலன்கள் ஏற்படக்கூடும் எனது குருவான போகருடைய கருணையினால் நன்றாக ஆராய்ந்து சொன்னேன் எனது நூலின் சிறப்பினை அறிந்து கொள்வாயாக

விருச்சிக லக்கின பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *