Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

ஜாதகத்தில் கருச்சிதைவு ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்

  • by

ஜாதகத்தில் கருச்சிதைவு ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்

 

திருமணமமான சில மாதத்தில், பெண்ணிடம் கேட்கும் முதல் கேள்வி ஏதும் விஷேசம் இல்லியா?

🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼

அபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை

திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது,

‘தவறாத சந்தானம் வேண்டும்’

என்று கேட்கிறார்.

அதாவது

மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை;

குழந்தைப் பாக்கியம் எனும் சந்தான பிராப்தி தவறாமல் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

ஆணுக்கு 5-ஆம் இடமும் ,

குருபகவானும்,

பெண்ணுக்கு 5-ஆம் இடமும் ,

ஒன்பதாம் இடமும் ,

செவ்வாயும் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் இடங்கள்.

அடிக்கடி கருகலைவு ஏன் ஏற்படுகிறது?

1. பெண்ணின் ஜாதகத்தில் ,ஐந்தாம் அதிபதி நீசம் ஆகக்கூடாது.

2. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ,ராகுவுடன் 5 டிகிரிக்குள் இணையக் கூடாது.

3. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ,ஐந்தாமிடம் பாபகர்த்தாரி தோஷத்திற்குள் இருக்கக்கூடாது.

4. பெண்ணின் ஜாதகத்தில் 5ல் சனியோ,

ஐந்தாம் அதிபதி, சனியுடன் மிக நெருங்கிய இணைவில் இருக்கக் கூடாது.

5. செவ்வாய் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாகி ,நீசமாகியிருந்தால் அடிக்கடி உதிரப் போக்கு ஏற்பட்டு கருக்கலைவு ஏற்படும்.

6. ராகுவுடன் நெருங்கிய அமைப்பில் இருக்கும் பொழுது ,மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருக்கும்.

6. சந்திரன், ஐந்தாம் அதிபதியாகி, ராகுவுடன் கிரகண தோஷத்தில் இருந்தாலும், அடிக்கடி கருக்கலைவு ஏற்படும்.

7 குரு அஸ்தமனம் ,

நீ்சமானவருக்கு முதல் முயற்சியிலேயே குழந்தை கிடைப்பதில்லை.

அடிக்கடி கரு கலைவு உண்டு.

8. சுக்கில காரகனாகிய சுக்கிரன், ஜாதகத்தில் கேதுவுடன் இணைந்தாலும் ,

அஸ்தமனம் ஆனாலும்,

முழு நீசம் பெற்றாலும் , ஆண்களுக்கு ஆண் தன்மை முழுமையாக இருக்காது.

விந்தணு குறைபாடு இருக்கும்.

தாம்பத்தியத்திலும் திருப்தி இருக்காது.

குழந்தைபேற்றில் தாமதத்தை ஏற்படுத்தும்.

9. ஜாதகத்தில் புத்திர தோஷம் இருக்கும் பட்சத்தில், குரு திசை நடப்பவரையும்,

சுக்கிர திசை நடப்பவரையும் இணைப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் பல ஜாதகங்களில் பார்க்க முடிகிறது.

இல்லையேல் தாமதமான குழந்தைப் பிறப்பை கொடுத்துவிடும்.

10. ஐந்தாம் பாவகத்தில் சூரியன் ,சந்திரன் இணைவு இருப்பது கூடாது.

11. ஐந்தாம் அதிபதி, சூரியன் சந்திரனுக்கு இடையில் நெருக்கமாக இணைந்து வலு இழக்கக் கூடாது.

12.

இந்த அமைப்பில் ஐந்தாம் அதிபதி சனி ஆனால், சூரியன் ,சந்திரன் உடன் இணைவது கடுமையான புத்திர தோஷத்தையோ,

அல்லது

புத்திர தாமதத்தையோ கண்டிப்பாக கொடுக்கும்

ஆண் ,பெண் ஜாதகங்களில் ஐந்தாம் அதிபதி, புத்திர ஸ்தானாதிபதி வலுவிழந்த ஜாதகங்களை,திருமணத்தில் இருவருக்கும் இணைக்க கூடாது.

இருவரில் ஒருவருக்கு புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் மற்றவருக்கு வலுவான புத்திரயோகம் உடைய ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

புத்திர தோஷத்திற்கு சரியான பரிகாரம்.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர்.

இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.

இங்குள்ள கிருஷ்ணனை முறையாக வழிபட்டு,

சந்தன கோபாலகிருஷ்ணன மந்திரத்தை தினசரி வழிபட்டு வர புத்திர பாக்கியம் உண்டு.

கரு வளர்ர

நாயகியான திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகையையும் வழிபட்டு வரலாம்.

குழந்தை பாக்கியத்தை கொடுக்கக் கூடிய,

குருவிற்கு அதிபதியான திருச்செந்தூர் முருகனை தினசரி வழங்கி வரலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *