🔴 பாலாரிஸ்ட தோஷம் – ஜாதக அமைப்பின் விளக்கம்
லக்ன புள்ளி 6–8ன் சாரத்தைப் பெறுவது என்பது, ஒருவரின் வாழ்வின் அடிப்படைத் தூண் ஆகிய உடல், மனம், சந்ததி ஆகியவை ரோகம் (6) மற்றும் ஆயுள்/மறைவு (8) ஆகிய எதிர்மறை சக்திகளின் தாக்கத்திற்குள் வருவதை குறிக்கிறது. லக்னமே இவ்வாறு பாதிக்கப்படும்போது, அந்த ஜாதகத்தில் வாழ்க்கை இயல்பாக ஓடாமல் தடைகள், மன உளைச்சல்கள், தொடர்ச்சியான அசாதாரண அனுபவங்கள் உருவாகும்.
இந்த நிலையில் சந்திரன் லக்னத்திற்கு 6 அல்லது 8ல் மறைவது அல்லது சந்திரன் 6/8க்கு உரிய கிரகத்தின் சாரம் பெறுவது மனதின் இயற்கை ஓட்டத்தை முற்றிலும் மாற்றிவிடும். சந்திரன் என்பது மனம், தாய், கர்ப்பம், வளர்ச்சி, இனப்பெருக்க சக்தி ஆகியவற்றின் அடையாளம். ஆகவே சந்திரன் 6–8 சக்திகளால் மறைக்கப்படும்போது, சந்ததி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான உள் தடைகள் தோன்றும்.
🔴 பாலாரிட்டம் என்றால் என்ன?
பாலாரிட்டம் என்பது குழந்தை பெறுதல், கருவில் நிலைத்தல், கர்ப்பம் முழுமை அடைதல், குழந்தை ஆரோக்கியம் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு சூக்ஷ்மமான ஆனால் தீவிரமான தோஷம். இது வெளிப்படையாக உடனே தெரியாது; காலம் செல்லச் செல்லவே அதன் விளைவுகள் தெளிவாகும்.
இந்த தோஷம் உள்ள ஜாதகங்களில்
குழந்தை தாமதம்
கருவிழப்பு
பிறந்த குழந்தைக்கு உடல் அல்லது மனப் பாதிப்பு
குழந்தைகளுடன் உணர்ச்சி பிணைப்பு குறைவு
“பிள்ளை இருந்தும் பிள்ளை இல்லாத” உணர்வு
எனும் நிலைகள் அடிக்கடி காணப்படும்.
🔴 சந்திரன் 6–8 மறைவு தரும் உளவியல் விளைவுகள்
சந்திரன் மறைவடையும் போது, பெற்றோர் ஆக வேண்டும் என்ற எண்ணமே பயம், குழப்பம், மன அழுத்தமாக மாறுகிறது.
“நமக்கு குழந்தை வேண்டுமா?”, “பொறுப்பு சுமக்க முடியுமா?” போன்ற உள்மன சந்தேகங்கள் உருவாகும்.
இந்த மனநிலை கர்ப்ப சக்தியை தானாகவே தடுக்கிறது.
இதுவே பாலாரிட்ட தோஷத்தின் மிக ஆழமான ரகசியம்.
🔴 பெண்கள் ஜாதகத்தில்
பெண்களுக்கு இந்த தோஷம் இருந்தால்
கர்ப்பம் தங்குவதில் சிரமம்
கருவிழப்பு
ஹார்மோன் சமநிலையின்மை
தாய் மனம் முழுமையாக வெளிப்படாத நிலை
என விளைவுகள் உருவாகும்.
சந்திரன் பாதிப்படைந்ததால், இயற்கை தாய்மை சக்தி முழுமையாக செயல்படாது.
🔴 ஆண்கள் ஜாதகத்தில்
ஆண்களுக்கு இந்த அமைப்பு இருந்தால்
குழந்தை பெறும் விஷயத்தில் அலட்சியம்
பொறுப்பு தவிர்க்கும் மனநிலை
குழந்தைகளிடம் உணர்ச்சி தூரம்
சந்ததி பற்றிய பயம் அல்லது வெறுப்பு
என வெளிப்படும்.
இது உடல் குறைபாடு அல்ல; மனதளவிலான தடுப்பு.
🔴 ஏன் 6 8 மிகவும் கடுமை?
6 என்பது ரோகம், எதிர்ப்பு, கடன்
8 என்பது மறைவு, தடை, திடீர் இழப்பு
இந்த இரண்டும் சந்திரனை கட்டிப்போடும்போது,
கருவாக தொடங்கிய விஷயம் முழுமையடையாமல் நிற்கும்.
அதனால் பாலாரிட்டம் என்பது “இல்லை” என்ற நிலை அல்ல,
“தொடங்கி நிற்கும்” தோஷம்.
🔴 பொதுவான பரிகார வழிகாட்டல் (சுருக்கமாக)
சந்திரன் சுத்திகரிப்பு மிக முக்கியம்
தாய், தாய்மார், பெண்கள், குழந்தைகளுக்கு சேவை
அமாவாசை / பௌர்ணமி சந்திர வழிபாடு
நீர்நிலைகள், பால், வெள்ளை நிற தானங்கள்
மனநிலை சுத்தி (இதுவே முதன்மை)
❤️💐 குழந்தை வடிவ ஆஞ்சநேயர் பால கணபதி, பாலகன் வடிவில் உள்ள கிருஷ்ணன், பாலகன் வடிவில் உள்ள முருகப்பெருமான் வழிபாடு குழந்தைகளுக்கு மேன்மையை தரும். கர்ப்பிணி பெண்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
{ பொதுப்பதிவு மற்ற கிரகங்கள் இணைவு பார்வை பொருத்து மாறுபடும் குரு பார்க்க சிறப்பு விதிகளுக்கும் விதிவிலக்குகளுக்கும் உட்பட்டது }