திருமண பொருத்தத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:-
திருமணத்திற்கு பிறகு மணமக்களுடைய வாழ்க்கை எவ்வாறு செல்லும் என்பது அடுத்தடுத்து அவர்களுக்கு நடக்க போகக்கூடிய தசா புத்தியை பொருத்தது. தனிமனிதருக்கு நடக்கும் நல்லதோ அல்லது கேட்டதோ எல்லாமே அவர்களுக்கு நடைபெறக்கூடிய தசாபுக்தியைப் பொருத்தது. ஆகையால் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பதை விட இருவருக்கும் அடுத்து பத்து வருடங்களை ஒட்டி நடைபெறக்கூடிய தசா புத்திகளுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவத்தை தந்தாக வேண்டும். என்னதான் ஒரு ஜாதகம் இயல்பாகவே ஏழாம் பாவகம், ஏழாம் அதிபதி சுக்கிரன் போன்ற கிரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அவயோக தசா காலங்கள் இன்றி யோக தசா புத்திகள் நடைபெறக்கூடிய பட்சத்திலும் லக்னாதிபதி வலுக்குறையாத நிலையில் இருக்கக்கூடிய பட்சத்திலும் திருமண வாழ்க்கையில் பெரிய புயல் வரப்போவதில்லை. #Iniyavan
இருவருடைய ஜாதகத்திலும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருப்பது அவசியம்.ஏனெனில் லக்னாதிபதி என்பவர்தான் ஜாதகர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் ?அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை தீர்மானிக்கக்கூடிய பிரதான விஷயமாக இருப்பார்.
திருமண வாழ்க்கையில் லக்னாதிபதி (Lagna Lord) மிக முக்கியமான பங்கை வகிக்கிறார். காரணம், லக்னம் என்பது ஒருவரின் உடல், மனம், குணநலன், வாழ்க்கையை அணுகும் முறை ஆகியவற்றைக் குறிக்கிறது. அந்த லக்னத்தின் அதிபதி எப்படி இருக்கிறார் என்பதன் அடிப்படையில்தான் திருமண
வாழ்க்கை செல்லும்.
திருமணம் என்பது இரண்டு நபர்களின் இணைவு. அதில் ஒருவர் எப்படி தன்னை வெளிப்படுத்துகிறார், சமரசம் செய்கிறாரா?, பிடிவாதமாக இருக்கிறாரா? என்பதெல்லாம் லக்னாதிபதியின் நிலையைப் பொறுத்தது.
லக்னாதிபதி வலுவாக இருந்தால்: தன்னம்பிக்கை, புரிதல், பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும்.
பாதிக்கப்பட்டிருந்தால்: அகந்தை, சந்தேகம், மன அழுத்தம் போன்றவை தோன்றலாம். லக்னாதிபதி இயற்கை பாபராகி வலுத்திருக்கும் பொழுது சுவர் தொடர்பில் இருப்பது அவசியம்.
துணையை அணுகும் விதம்:- 7-ஆம் பாவகம் திருமணத்தைக் காட்டினாலும், அந்த திருமணத்தை எப்படி நடத்துகிறார், மண வாழ்க்கையை எப்படி கொண்டு செல்கிறார் என்பதைக் காட்டுவது லக்னாதிபதி.
நல்ல யோகம் பெற்ற லக்னாதிபதி → துணையை மதித்து நடப்பார்.
பாவகிரக தொடர்பு / பாதிப்பு → சுயநலம், கோபம், ஈகோ பிரச்சினைகள். நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மை போன்றவற்றை தரும்.#Iniyavan
ஒருவருக்கு லக்னாதிபதி மிக நல்ல நிலையில் இருந்து மற்றொருவருக்கு முற்றிலும் சரியில்லாத நிலைகளில் இருந்து தசா புத்தி நடத்தும் பொழுது அது தம்பதியாக வரப்போறவருடைய வாழ்க்கையும் பாதிக்கும் என்பதால் இருவருக்குமான வாழ்க்கை முற்றிலும் நல்லபடியாக செல்வதற்கு வாய்ப்பு இல்லை. இது போன்ற நிலைகளில் இப்படிப்பட்ட பொருத்தங்களை தவிர்ப்பது அவசியம்.
லக்னாதிபதி ஆறு, எட்டாம் அதிபதியுடன் இணைந்து தசா புத்திகள் நீண்ட காலத்திற்கு நடப்பில் இருக்கும் பொழுது அவருக்கு லக்னாதிபதி நல்ல நிலையில் உள்ள ஒருவரை இணைப்பது
சரியற்ற ஒன்றாக இருக்காது.
அதேபோல் லக்னத்தோடு சுபர்கள் மட்டுமே தொடர்பு கொண்ட ஒருவரை லக்னத்தோடு ஆறு, எட்டாம் அதிபதிகள் சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் தொடர்பு கொள்ளும் அமைப்புடைய ஜாதகத்துடன் இணைக்க கூடாது.
லக்னாதிபதி பலவீனமான நிலையில் இருக்கும்பொழுது, ஆறு எட்டாம் அதிபதியின் தொடர்பும் லக்னத்திற்கோ லக்னாதிபதிக்கோ இருக்கும் பொழுது ஜாதகர் யார் சொன்னாலும் கேட்காத மனநிலையில் கடுமையான கோபக்காரராக முரடாக இருப்பார். இது போன்ற நிலைகளில் லக்னத்துடன் சுபர்கள் மட்டுமே தொடர்பு கொண்ட ஒருவரை வாழ்க்கைத் துணையாக இணைத்தால் அவருக்கும் இவரால் மண வாழ்க்கை பிரதானமாக பாதிக்கும் என்பதை உணர்ந்து பொருத்தத்தை தவிர்ப்பது அவசியம்.
ஆறு,எட்டாம் அதிபரின் தொடர்பை பெற்ற லக்னாதிபதி தசா நடைபெறும் பொழுது , ஆறு மற்றும் எட்டாம் பாவகம் சார்ந்த விஷயங்களான வம்பு, வழக்கு,அடிதடி, அசிங்கப்படும்படியான செயல்களில் ஈடுபடுதல், வழக்கு இது சார்ந்த விஷயங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு இது போன்ற நிலைகளில் லக்னத்திற்கு சுபர் தொடர்புகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஏனெனில் சுபர் தொடர்பு எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்தும்.
திருமண பொருத்தத்தில் லக்ன பாதிப்பை விட லக்னாதிபதி நிலை முக்கியமானது.
இருவருடைய ஜாதகங்களிலும் லக்னாதிபதியின் வலு மற்றும் தரநிலை ஒப்பானதாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு லக்னாதிபதி வலுவாகவும் மற்றொருவருக்கு பலவீனமாகவும், பாவர்கள் தொடர்புடன் இருக்கக்கூடிய பட்சத்தில் சமமற்ற மன அமைப்பு உருவாகும்.
இருவருக்கும் லக்னம் பாவ கிரக தொடர்பில் இருந்தாலும் இருவருக்கும் லக்னாதிபதி வலுவாக இருந்தால் பரஸ்பர புரிதல் ஏற்படும்.
ஒருவருக்கு லக்னம் சுப தொடர்பிலும் மற்றொருவருக்கு கடும் பாதிப்பும் இருந்தால் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஜாதகர் உளவியல் ரீதியாகவே மன பாதிப்பிற்கு உள்ளாகுவார்.
திருமண பொருத்தத்தில் லக்னாதிபதி நிலை 7-ஆம் பாவகத்துக்கு சமமான முக்கியத்துவம் பெறுகிறது.
7-ஆம் பாவகம் வாழ்க்கைத் துணையை குறித்தாலும் லக்னாதிபதிதான் மண வாழ்க்கையை எவ்வாறு வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
7-ஆம் பாவம் வலுவாக இருந்தாலும் லக்னாதிபதி பலவீனமாக இருந்தால்,
திருமண வாழ்க்கை இருந்தாலும் மண வாழ்க்கையில் மகிழ்வான அனுபவம் முழுமையாக இருக்காது.
லக்னாதிபதி வலுவாக இருந்து 7-ஆம் பாவகத்தில் குறை இருந்தால்,
அந்த குறைகளை சமாளிக்கும் மனரீதியான தைரியம் உருவாகும்.
திருமண நிலைத்தன்மை என்பது 7-ஆம் பாவகத்தின் தரத்தால் மட்டும் அல்ல;
லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
இருவருடைய ஜாதகங்களிலும் லக்னாதிபதி தரநிலை சமமாக இருந்தால்,
வாழ்க்கை அணுகுமுறையும் பொறுப்பு உணர்வும் ஒத்திசையும்.
லக்னாதிபதி தரநிலையில் பெரிய வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில்,
ஒருவருக்கு திருமணம் “உறவு” ஆகவும் மற்றொருவருக்கு “சுமை” ஆகவும் மாறும்.