தூமகேதுவின் துவாதச பாவ பலன்.
1. ஜென்ம லக்கினத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் எல்லாக் கல்விகளிலும்
சந்தோஷமுடையவர். சுகி, வாக்கு சாலகன், வாக்கு நிபுணர்களிடம் பிரியர்,
எல்லாவற்றிலும் ஆசையுடையவர்.
2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன்
உபன்னியாசகர்களுக்கு ( ப்ரியம் சொல்பவர் ) யஜமானன் ஆவார்.
3. மூன்றாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் காவியங்களைச் செய்பவர், பண்டிதர்,
மானி, விநயமுடையவர், வாகனத்துடன் கூடியவர், மன்மதன் போன்றவர், குரூரச்
செய்கையுடையவர், மெல்லிய தேகமுடையவர், தனமில்லாதவர்,
வெகு தீவிர நோயுடையவர்.
4. நான்காமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் ரூபவான், குண சம்பன்னன்,
சாத்துவீகர், புகழில் பிரியர், எப்போதும் சுகமுடையவர்.
5. ஐந்தாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சுகி, போகி, கலைகளையறிபவன்,
யுக்தியறிவுடையவர், வாய்ச்சாலகன், குருபக்தியுடையவர், தாய் வம்சத்தை அழிப்பவன்.
பீடையுடையவர் , வெகு உறவினருடையவர்.
6. ஆறாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சூரன், வசியமுடையவர்,
யஜமானன், ஆழ்ந்த கருத்துடையவர். 7. ஏழாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் ரக்த பீடையுடையவன், காமி,
நேர்மாறுபாடான வழிகளுடையவர், போகத்துடன் கூடியவர்,
வேசிகளிடத்தில் சினேகமுடையவர்.
8. எட்டாமிடத்தில் தூமகேது இருந்தால் நீச்ச செய்கையுடையவர், பாபி, வெட்கம் கெட்டவர்,
எப்போதும் நிந்திக்கப் படுபவர், நிந்திப்பவர், குற்றவாளி, பிறர் பக்ஷமுடையவர்.
9. ஒன்பதாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சந்தோஷி லிங்கத்தைத் தரிப்பவர்
எல்லா ஜீவன்களிடமும் இன்பம்,அன்பு உடையவர், தர்ம காரியங்களின்
அறிவும், ஆற்றலுமுடையவர்.
10. பத்தாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சுகம் செளபாக்கியமிக்கவன்.
சமார்த்தியமுடையவன், ஸ்திரீகளுக்கு வல்லவர், கொடையாளியாவார்.
11. பதினொராமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் எப்போதும் லாபமுடையவர்,
நல்ல தர்மவான். பூஜிக்கப்படுபவன் ஆவான். தன சம்பாதனையும், புகழும், சூரத்துவமும்,
நல்ல யாகாதிசெளக்கியங்களும் அதிக கல்வியும் அடைவர்.
12. பன்னிரண்டாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் பாபச் செய்கையுடையவர்,
சூரன் அக்கரைக்குறையுடையவர், தேஜஸ் யுடையவர்,
பரதாரகமனி, குரூரமுடையவனாவர்.