லக்னம் பொருத்ம்
ஆணின் ராசி பெண்ணுக்கு லக்னம் ஆகவும்
ஆணின் லக்னம் பெண்ணுக்கு ராசியாக இருந்தால்
திருமண பொருத்தம் எவ்வாறு இருக்கும்? ❓
லக்னம் என்பது ஜாதக கட்டத்தில் முதல் வீடாகும்.
லக்னத்தைப் பயன்படுத்தி பொருத்தம் பார்ப்பது லக்ன பொருத்தம் ஆகும்.
லக்னத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பதினாறு வீடுகள் கணக்கிடப்படுகின்றன.
ஒரு ஜாதகத்தை முதலில் பார்க்க துவங்கும் பொழுது லக்கினம் தான் முதன்மையாக கவனிக்க பட வேண்டும்.
ஏன் எனில் லக்கினம் உயிர் ஸ்தானம்
மற்றும் விதி என்று அழைக்கப்படும்.
எந்த ஒரு ஜாதகரும் லக்கினம் மற்றும்
லக்கின அதிபதி குணாதிசயங்களை தான் அதிகம் வெளிப்படுத்துவார்.
லக்கினமும்,
லக்கின அதிபதியும் எவ்வளவு சுப வலுவில் இருக்கிறதோ
அந்த அளவு தான் ஜாதகரின் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் அவ்வாறே நடைபெறும்.
ராசி என்பது உடல் மற்றும் மனதை குறிக்கும்.
சந்திரனின் இருப்பை வைத்து உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தையும்,
மன வலிமையையும் நிச்சயம் கணிக்க முடியும்.
லக்கினத்தின் அடிப்படையில் தான் தசா – புக்தி பலன்கள் காண முடியும்.
ராசியின் அடிப்படையில் தான் கோட்சார பலன்கள் காண முடியும்.
தசா புக்தியும்,
கோட்சாரமும்
ஒரு ரயில் தண்டவாளத்தின் இரண்டு இரும்பு தூண்கள் ஆகும்.
எனவே
தசா புக்தி இல்லாமல் கோட்சாரமும்,
கோட்சாரம் இல்லாமல்
தசா புக்தியும் முழுமை பெறாது.
இறுதியாக
லக்கினம் வலது கண்,
ராசி இடது கண் .
இரண்டும் நிச்சயம் நமக்கு தேவை.
ஆனால் பலன்கள் கூற முதலில் தசா புக்தி அமைப்பு தேவை.
அதற்கு லக்கினம் தேவை.
இரண்டாவதாக இந்த தசா புக்தியில்,
ஒரு குறிப்பிட்ட கோட்சார கிரக அமைப்பில் தான்
ஜாதகருக்கு அந்த குறிப்பிட்ட பலன்கள் நடைபெறும்.
எனவே
முதல் ரேங்க் லக்கினம்,
இரண்டாவது ரேங்க் ராசி.
எனவே ஒரு தனி நபர் ஜாதகத்தில் இரண்டும் கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன், நலமுடன்…
இவைகளே ஜாதகரின் பண்புகளையும்,
வாழ்க்கை நிலையையும் நிர்ணயிக்கின்றன.
ஜாதகத்தை பொறுத்தவரை லக்னம் என்பது உயிராகவும்,
ராசி என்பது உடலாகவும் கருதப்படுகின்றது.
லக்னம் என்பது சூரியனை பொருத்து அமைவது.
ராசி மற்றும் நட்சத்திரம் என்பது சந்திரனை பொருத்து அமைவது.
இதில் சூரியனே நிலையானது என்பதால்
🪭 லக்னமே நிலையானது.
ஒரு ராசி என்பது 2 1/4 நாள் இருப்பதாகும்.
ஆனால்
🔅 லக்னம் என்பது இரண்டு மணி நேரம் இருப்பதாகும்.
இதனால்
ராசியை கொண்டு பலன்கள் மற்றும் பொருத்தங்கள் பார்ப்பதைக் காட்டிலும்
லக்னத்தை கொண்டு பலன்கள் மற்றும் பொருத்தங்கள் பார்ப்பது
இன்னும் சிறப்பாகவும்,துல்லியமாகவும் இருக்கும்.
ஜென்ம லக்னம் என்பது
ஒருவர் பிறக்கும் போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் உள்ளதோ
அந்த ராசி மண்டலம் லக்னமாக செயல்படும்.
லக்னத்தை கொண்டே விதி என்னும் தசா புத்திகள் கணக்கிடப்படுகின்றன.
லக்னம் என்பதே ஜாதகத்தின் முதல் கட்டமாகும்,
இதிலிருந்தே மற்ற பாவங்கள் கணக்கிடப்பட்டு ஜாதகரின் பலன்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
லக்னத்திற்கு மற்ற பதினாறு பாவங்களின் பண்புகளும் சிறிது உள்ளதால்
லக்னத்திற்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது
சார ஜோதிடத்தின் அடிப்படை விதி.
உதாரணமாக
திருமணத்திற்கு உரிய வீடான ஏழாம் வீடு கெட்டு இருந்தாலும் ❗
லக்னம் சிறப்பாக இருந்தால் திருமண வாழ்க்கை பிரச்சனையாக இருக்காது.
ராசியை விட உயர்ந்த லக்னத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.
ஜாதகர் தன் லக்னத்திற்கு தீமை செய்யும்
4,6,8,12 லக்னம் இல்லாதவரை திருமணம் செய்தால் நன்மை ஏற்படும்.
இதில் 4 ம் வீடு 30% பிரச்சனைகளை ஜாதகருக்கு தரும்.
நட்சத்திரத்தை கொண்டு பொருத்தம் பார்க்கும் முறையை போலவே
இது லக்னத்தை கொண்டு பொருத்தம் பார்க்கும் முறையாகும்.
நமது லக்னத்தில் இருந்து மற்றவரின் லக்னம்
4,6,8,12 என இருந்தால் பொருத்தம் இல்லை என கொள்ளவும்.
இது ஒரு லக்னத்தை பொறுத்தும் மாறுபடும்.