பாபகர்த்தாரி யோகம்
🪯 உங்கள் வீட்டிற்கு இரு புறமும் தாதாக்கள் குடியிருந்தால் என்ன ஆகும்? ⁉️
✴️ ஏதாவது அடிதடி என்றால் உங்களுக்கும் சேர்த்து அடிவிழும்.
அல்லது❗
✴️ அருகில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணக்காக – என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்காக – உங்களையும் கூட்டிக் கொண்டுபோய் வதைக்கலாம்.
✴️ இன்னொன்றையும் யோசியுங்கள். ❗
✴️ அந்தக் காலத்தில் பொதுமகளிர் எல்லாம் வீடுகளில் குடியிருந்து கொண்டே தொழில் செய்தார்களாம்.
✴️ அதுபோல உங்கள் வீட்டிற்கு இரு புறமும் அந்த மாதிரிப் பெண்கள் இருந்தால் உங்கள் நிலை என்ன ஆகும்.
✴️ சரக்கடித்துவிட்டு, அவர்களைத் தேடி வருகிறவன்,
குடி மயக்கத்தில் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டித் திறக்கச் சொல்லி தகராறு செய்யும் அபாயம் இருக்கும்
✴️ அதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள நமக்கு முக்கியம்.
✴️ நமது நன்மைக்கும், அமைதிக்கும் முக்கியம்.
✴️ அதுபோல ஜாதகத்தில் ஒருவீட்டின் இருப்க்கமும் தீய கிரகங்கள் இருந்தால்,
✴️ அந்த வீட்டிற்கு அது கேடானது.
💢 அதற்குப் பாபகர்த்தாரி யோகம் என்று பெயர்.
💢 பாபிகளால் சூழப்பெற்ற வீடு – அதற்குரிய கேடுகளை அனுபவிக்க வேண்டும் என்று பொருள்
💢 இன்று அதைப் பற்றி ஒரு பர்ர்வை பார்ப்போம்! ❗
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🔹 பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள் :-
♈ இது ஒரு அவயோகம்.
அதை முதலில் நினைவில் வையுங்கள்.
♈ ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால்
அதாவது
இருந்தால்,
அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.
🪭 1.
ஒன்றாம் வீடு :-
அதாவது
லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால்,
அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான்.
விபத்துக்கள் நேரிடும்.
எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
🪭 2.
இரண்டாம் வீடு:
இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.
(2nd house is the house of finance and family affairs)
குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும்.
குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.
குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
🪭 3.
மூன்றாம் வீடு:
மரியாதைக்கு பங்கம் ஏற்படும்.
உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள்,
மற்றும்
நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
🪭 4.
நான்காம் வீடு:
பெற்றோர்களை இழக்க நேரிடும்.
வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும்.
அமைதியை இழக்க நேரிடும்.
தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
🪭 5.
ஐந்தாம் வீடு:
குழந்தைகளுக்கு,
குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு
சிரமங்கள்,
கஷ்டங்கள்,
துன்பங்கள் ஏற்படும்.
எப்போதும் மன நிம்மதி இருக்காது.
🪭 6.
ஆறாம் வீடு:
தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும்.
விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
🪭 7.
ஏழாம் வீடு:
மனைவி
அல்லது
கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான்.
அவர்களால் சிரமப்பட நேரிடும்.
அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
🪭 8.
எட்டாம் வீடு:
வறுமை நிலவும்.
கடன்கள் உண்டாகும்.
நோய்கள் உண்டாகும்.
சிரமமான வழ்க்கை வாழ நேரிடும்.
பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
🪭 9.
ஒன்பதாம் வீடு:
தந்தையை இழக்க நேரிடும்.
வறுமையான சூழல்கள் உண்டாகும்.
வறுமை வாட்டி எடுக்கும்.
🪭 10.
பத்தாம் வீடு:
வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
🪭 11.
பதினொன்றாம் வீடு:
காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும்.
கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும்.
வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
🪭 12.
பன்னிரெண்டாம் வீடு:
தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும்.
ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும்.
பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.
🟡 எல்லாமே பொதுப்பலன்கள்.
அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம்
அல்லது
குறையலாம் அல்லது
இல்லாமல் போகலாம்.
அதையும் மனதில் கொள்ளவும்