ஜாதகத்தில் யாருக்கெல்லாம்
“(சூரியன்,ராகு),(சூரியன்,கேது)”
இந்த 2 கிரகச் சேர்க்கைகளில் ஏதேனும் ஒரு கிரகச் சேர்க்கை பெற்று இருப்பவர்களுக்கு அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி குணங்கள் பிரச்சனைகள் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
1.(சூரியன்,ராகு கிரகச் சேர்க்கை)
யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (சூரியன் ராகு) கிரக சேர்க்கை இருக்கின்றதோ இவர்களின் தந்தை என்றைக்குமே ஆணாதிக்கம் கொண்டவராகவும் அதிகமாக அதிகாரம் செய்யக் கூடியவராகவும் இருப்பார்.எப்போதுமே ஹிட்லர் போன்று தான் இருப்பார்.
அதாவது தந்தையாக குடும்பத்திற்கு பிள்ளைகளுக்கு என்னென்ன செயல்பாடுகள் கடமைகள் ஆற்றவேண்டுமோ,நிறை
வேற்ற வேண்டுமோ அதனை இவர்கள் தந்தை மிக அதிகமாக செய்வார்.அதாவது ஒரு குடும்பத் தலைவராக தன்னுடைய குடும்பத்திற்கு என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டுமோ அதனை இவர்கள் மிக அதிகமாக செய்வார்கள்.
தன்னுடைய குழந்தைகள் ஒரு பொருளை வாங்கி தாருங்கள் என்று கேட்டார்கள் என்றால் இவர்கள் ஐந்து பொருள்களை வாங்கி கொடுப்பார்கள்.அதாவது தன்னுடைய குடும்பத்தினர் கேட்டதற்கு அதிகமாக இவர்களை அனைத்தையும் வாங்கி தருவார்கள்.
தன்னுடைய குடும்பத்தினரை சரியாக வழி நடத்துவதும்.
தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் சரியாக வைத்துக் கொள்வதும்
குடும்பத்தினரை சரியாக அதிகாரம் செய்வதும் தன்னுடைய பேச்சை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதும் போன்றுதான் இவர்கள் இருப்பார்கள் .
இவர்கள் தன்னுடைய குடும்பத்தினருக்கு அனைத்து விதமான விஷயங்களை சரியாக செய்வார்கள் ஆனால் அனைத்து விஷயங்களும் செய்து விட்டு
கடைசியில் அனைவரையும் அதிகாரம் செய்வார்கள் கட்டுப்படுத்த பார்ப்பார்கள்.ஆண் ஆதிக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள்
சில சமயங்களில் ஹிட்லர் போல் நடந்து கொள்வார்கள்.
தன்னுடைய சமூகத்திலும் வெளி உலகத்திலும்
அடுத்தவர்களிடத்திலும் இவர்கள் மிகவும் தன்னை பெரிய ஆளாக அந்தஸ்து கொண்ட நபராக இவர்கள் காட்டிக்கொள்வார்கள்.
யாருமே இவரைப் பற்றி குறை சொல்லக்கூடாது.யாரும் நம்மை அவமதிக்கக் கூடாது யாரும் நம்மை அவமதிக்கும் வகையில் நாம் சரியாக இருக்க வேண்டும்.நம்முடைய அந்தஸ்து கௌரவம் என்றைக்குமே யாரிடத்திலும் குறைய நமக்கு வர வேண்டிய மரியாதை அனைவரிடத்திலும் சரியாக வர வேண்டும் என்ற குணங்கள் இவர்களுக்கு மிக மிக அதிகம்.
மேலும் இவர்கள் என்றைக்குமே வெளி உலக மக்களுக்கு தன்னுடைய சமூகத்தினருக்கு அதிகமாக உதவி செய்வதை விட தன்னுடைய குடும்பத்தினருக்கு தன்னுடைய சொந்தங்களுக்கு தான் இவர்கள் மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் உதவி செய்வார்கள்.
நான் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய சொந்தங்களுக்கும் இவர்கள் என்றைக்குமே கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற குணத்தோடு தான் இருப்பார்கள்.தன்னுடைய குடும்பத்தினர் சொந்தங்கள் யாரும் நம்மை குறை சொல்லி விடக்கூடாது என்ற குணங்கள் இவர்களுக்கு மிக அதிகம்.
தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் சொந்தங்களுக்கும் அனைத்து விதமான உதவிகளை சரியாக செய்து விட்டு பிறகு இதெல்லாம் நான் தான் செய்தேன். என்னால்தான் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்,நான் இல்லை என்றால் நீங்கள் எப்போதே இல்லை என்று சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.
மேலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லக்கூடிய குணங்கள்,அதிகாரம் செய்வது, அகங்காரம்,ஆணவம்,பொறாமைகள்
இவர்கள் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற குணங்கள் இவர்களுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்.
அடுத்தவர்களை வேலை வாங்குவது தான் இவர்களுக்கு வாழ்க்கையில் பிடிக்கும் என்றைக்குமே,நிர்வாகத் திறமைகள் ,ஆளுமை திறமைகள்,
தலைமை தாங்கக்கூடிய குணங்கள் இவர்களுக்கு மிக அதிகம். எத்தனை பேர் கொடுத்தாலும் அவர்களை வைத்து இவர்களால் மிக சுலபமாக வேலை வாங்க முடியும்.
இந்த (சூரியன் ராகு) கிரக சேர்க்கை கொண்டவர்களின் தந்தையும் இதே போன்று தான் இருப்பார் இவர்களும் இதே போன்று தான் இருப்பார்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் தான் இருக்கும்.தந்தையும் இதே போன்று தான் இருப்பார்கள் இவர்களும் இதே போன்று தான் இருப்பார்கள்.
அதாவது இது போன்ற
(சூரியன் ராகு) கிரகச் சேர்க்கை கொண்டவர்களின் தந்தைக்கும்
இது பொருந்தும்,இவர்களுக்கும்
இது பொருந்தும் இருவரும் இதே போன்று தான் இருப்பாரு நடந்து கொள்வார்கள்.இருவருக்கும் நான் மேல் சொன்ன அனைத்து விதமான விஷயங்களும் பொருந்தும்.
2.(சூரியன்,கேது கிரகச் சேர்க்கை)
யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (சூரியன் கேது) கிரகச் சேர்க்கை இருக்கின்றதோ இவர்கள் தந்தை என்றைக்குமே தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய வேண்டிய ஆற்ற வேண்டிய கடமைகள் செயல்பாடுகளை சரிவர அவர் செய்ய மாட்டார்.
தந்தையாக தன்னுடைய குடும்பத்திற்கு பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகளை கடமைகளை இவர்களின் தந்தையால் ஒழுங்காக செய்ய முடியாது.தன்னுடைய குடும்பத்தினரை எப்படி நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் எப்படி சரியான வழியில் தன்னுடைய குடும்பத்தினரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை இவர் அறிந்திருக்க மாட்டார்.
வெறும் கடமைக்காக கடனுக்காகவும் வேண்டா வெறுப்பான என்னத்துடன் தான் இவர்கள் தன்னுடைய குடும்பத்தினருடன் இருப்பார்கள் வாழ்வார்கள்.தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இவர்கள் தந்தைக்கு இருக்காது.
எந்த ஒரு விஷயத்தையும் செயல்பாடுகளையும் கடமைகளையும் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் கஷ்டப்படுவார்கள் நான் ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.
அதாவது வெளி உலகத்தில் தன்னுடைய சமூகத்தில் யாருக்காவது ஒரு பிரச்சனை கஷ்டம் என்றால் இவர்கள் உடனடியாக சென்று அவர்களுக்கு உதவி செய்வார்கள்.அதாவது தன்னுடைய ஊரில் மற்றவர்களெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் உதவி செய்யக் கூடிய இவர்கள் தன்னுடைய குடும்பத்தினரை கண்டு அவ்வளவாக கொள்ள மாட்டார்கள்.
அதாவது மற்றவர்களுக்கு எல்லாம் இவர்கள் பாரபட்சம் பார்க்க மாட்டார்கள் ஆனால் தன்னுடைய குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் மட்டும் இவர்கள் பாரபட்சம் பார்ப்பார்கள்.
குடும்பத் தலைவராக இவர்கள் என்றைக்குமே சரியாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆணாதிக்கம் தலைமை தாங்கக்கூடிய குணங்கள் நிர்வாகம் செய்யக் கூடிய குணங்கள் இவர்களுக்கு அதிகமாக இருக்காது.
அதாவது ஊருக்கெல்லாம் உதவக்கூடிய இவ்வாறு தன்னுடைய குடும்பத்தையும் பிள்ளைகளையும் கண்டு கொள்ள மாட்டார்.
இவர்கள் என்றைக்குமே வீட்டில் டம்மி பீஸ் ஆக இருப்பார்கள்.
குடும்பத்தில் இவர்களின் பேச்சு எடுபடாது.குடும்பத்தினர் இவர்களே ரொம்ப மதிக்க மாட்டார்கள்.வீட்டில் அம்மாவிடத்தில் திட்டு வாங்கக் கூடிய நபராகவும் இருப்பார்கள்.
இவர்கள் வீட்டில் என்றைக்குமே அம்மா தான் குடும்ப தலைவராக இருப்பார்கள்.
இந்த “(சூரியன் கேது)” கிரக சேர்க்கை கொண்டவர்களின் தந்தையும் இதே போன்று தான் இருப்பார் இவர்களும் இதே போன்று தான் இருப்பார்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் தான் இருக்கும்.தந்தையும் இதே போன்று தான் இருப்பார்கள் இவர்களும் இதே போன்று தான் இருப்பார்கள்.
அதாவது இது போன்ற “(சூரியன் கேது)” கிரகச் சேர்க்கை கொண்டவர்களின் தந்தைக்கும் இது பொருந்தும்,இவர்களுக்கும் இது பொருந்தும் இருவரும் இதே போன்று தான் இருப்பாரு நடந்து கொள்வார்கள்.இருவருக்கும் நான் மேல் சொன்ன அனைத்து விதமான விஷயங்களும் பொருந்தும்.
மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் “(சூரியன்,ராகு),(சூரியன்,கேது)” இந்த 2 கிரக சேர்க்கைகளில் ஏதேனும் ஒரு கிரக சேர்க்கை இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.
ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்தி பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.