ராகு-கேது மிகச்சிறந்த துல்லிய பரிகாரம்
முதலில் ராகு கேது யார் என பாருங்கள்
சுவர்பானு என்ற அரக்கன் தலையை இரண்டாக கொய்தது மகாவிஷ்ணு கரத்தில் இருக்கும் சக்கரம்.
அந்த சூரனை இரண்டாக கொய்த பின்பு தலைப்பகுதி ராகுவாகவும் உடல் பகுதி கேதுவாகவும் செயல்படுகிறது, அந்த ராகு கேது நமது வாழ்க்கைக்கு நமக்கு என்ன செய்வார் என்று பார்த்தால் தோஷம் இருக்கும்பொழுது திருமணத்தை தடை செய்வார்கள், ராகு பலம் பெற பல பெண்களுடன் உடலுறவு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் இவற்றையெல்லாம் செய்ய தூண்டுவார், கேது பகவானே எத்தனை திருமணம் செய்தாலும் அனைத்திலும் களத்திர இன்பத்தை தடை செய்வார்,
சரி ராகு கேதுவை எப்படி கட்டுப்படுத்துவது,
சுவர்பானு என்ற அசுரர் இரண்டாக பிளவு பட்டதால் அவரே ராகு-கேது என்று பார்த்தோம், அப்ப அந்த அசுரர் யாருக்கு முதலில் கட்டுப்படுவது எனில் சக்கரத்தாழ்வாருக்கு மட்டுமே, சுக்கிர சேத்திரம் ஸ்ரீரங்கம் சென்று சக்கரத்தாழ்வாரை வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் 16நெய் விளக்கு ஏற்றி 16 முறை வலம் வந்து வணங்க ராகு-கேது கட்டுப்படும்,
பலவித களத்திர பரிகாரம் பயனளிக்காமல் இருந்தவர்கள், கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க, தம்பதியினருக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மேலும் மேற்கண்ட ராகு கேதுவால் தோஷம் ஏற்படாமல் இருக்க நீங்கள் இந்த பதினாறு கரங்களுடன் இருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்குவது மிகச் சிறந்த ஒரு மாற்றத்தை தரும்,
ராகு கேதுவிற்கு முதல் பயமே சக்கரத்தாழ்வாரை கண்டுதான்,
அதுவும் இவர்கள் திருமாலை கண்டால் முதலில் அவர் கரத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை பார்ப்பார்கள்.
இதுபோல் சக்கரத்தாழ்வாரை ராகு கேது தோஷத்திற்கு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பில்லை. முதலில் ஒரு முறை இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்,
அருமையான பதிவு
சிறப்பான சிந்தனைகள்,தெரிந்தெடுத்த அருமையான பரிகாரம்.நன்றிகள் பல