குரு சந்திரன் சேர்ந்தால் திடமான சித்தம் உடையவராகவும், தன்னுடைய வம்சத்தில் அவரே நல்ல மற்றும் உயர்ந்த பதவியில் இருப்பவராகவும், தனசெல்வங்களை சேர்ப்பவராகவும், புகழ் அந்தஸ்து கௌரவம் மிக்கவராகவும், குடும்பத்தின் அன்பு அமைதி பாசம் அரவணைப்பு போன்ற குடும்பத்தின் மீது அனைத்து பற்றுகளும் இருந்தலும், அதிகப்படியான தியாகங்களை செய்பவராகவும், இதன் மூலம் கஜசேகரி யோகம் பெற்று செல்வ சீமாந்தனாக இருந்தாலும் மேற்சொன்னபடி வாய்க்கப் பெற்றாலும்
அதே குரு சந்திரன் 6,8,12 ல் இருந்தால் மேற்கூறிய பலன்கள் அனைத்தையும் இழப்பார். மனைவி மக்கள் மீது அந்த ஜாதகருக்கு பாசம் இருக்கும். அந்த பாசத்தை புரிந்து கொள்ளாமல் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்று விடுவார். தாய் தந்தையர் கூட நம் சொல்லுக்கு நிந்தனை செய்து ஒரு முன்னேற்றத்திற்கு தடையாகவே இருப்பார்கள். மாமனார் வழி உறவுகள் மூலம் அசிங்கத்தையும் அவமானத்தையும் கடுமையாக சந்திக்க நேரிடும். எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு கட்டத்தில் சேர்த்து வைக்கும் பொழுது அந்த சம்பாத்தியம் கரைந்து கொண்டே வரும். இந்த ஆறு எட்டு பன்னிரண்டில் குரு சந்திரன் இணைவு கஜசேகரி யோகம் வெகுவாக செயல்படாது. அசிங்கம் அவமானம் மன உளைச்சல் நிம்மதி இழப்பு பண இழப்பு இதுதான் அதிகமாக கொடுக்கும். தீர்வு கேட்பவர்கள் தசா நாதனை வழிபாடு செய்யுங்கள்.