எட்டில் #குரு கொல்வார்.
💥பொதுவாகவே கிரகங்களில் முழுமுதற் சுப கிரகமாக கருதப்படுவது குருவாகும். அதே குருவே மாறகம் செய்வதில் முதன்மையானவரும் அவரே ஆவார்
💥 எட்டில் குரு கொள்வார் என்று ஜோதிட சாஸ்திர நூல் குறிப்பிடப்பட்டுள்ளது அது எந்த விதத்தில் இன்று பார்ப்போம்.
💥 முதலில் குரு தான் நின்ற இடம் பாழ் பார்க்கும் இடம் சுபம் என்று அனைவருக்குமே தெரியும். எட்டில் நிற்கும் குரு தான் நின்ற இடத்தை பாழ் செய்வார் ஆயுள் முழுக்க கடுமையான துயரங்களையும் துன்பங்களையும் பலருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதே சமயம் எட்டில் அமர்ந்த குரு பார்க்கும் இடங்களான 12-ஆம் இடம், குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2ம் இடம், சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய 4ம் இடம்.
💥இந்த எட்டில் அமர்ந்த குரு குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் பொழுது நிச்சயம் கணவர் மனைவி இடையே பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரிவினை ஏற்படுகிறது. சில நேரங்களில் டைவர்ஸ் வரை செல்கிறது.
💥 அதேசமயம் 12ஆம் இடத்தை பார்க்கும் பொழுது கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் தடைபடுகிறது தாம்பத்தியம் தடைபடுகிறது. இதன் காரணமாக சிலர் வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்பவர்களாகவும் அல்லது இரண்டாம் திருமணம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
💥 அதேசமயம் நான்காம் இடத்தை பார்வை செய்யும் பொழுது அவர்களுக்கு வீடு வாசல் சொத்து சுகம் அனைத்தும் இருக்கும் அதே சமயம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றில் சந்தோஷத்தை தொலைத்து விடுகிறார்கள்.
💥 மேலும் பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு இருக்கும் பொழுது அதற்கு 6 8ல் ஆண் ஜாதகத்தில் குரு இருக்க அதாவது ஆண் ஜாதகத்தில் லக்னத்தில், 3ல் குரு இருக்க சிலருக்கு புத்திர தோஷம் ஏற்படுகிறது.
💥 எட்டில் அமர்ந்த குரு ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு தோஷங்களை தருவது இல்லை அவரை ஆட்சி பெற்று சுபம் செய்யும் நிலையை பெறுகிறார்
💥 இப்படிப்பட்ட ஜாதகத்திற்கு இரண்டாம் இடம் பலம் பெற்ற குடும்ப ஷ்தானம் வலுத்த ஜாதகத்தை இணைத்து வைக்கப்பட வேண்டும்.
💥 மாரகத்தை செய்வதில் முதன்மையானவர் குரு என்பதால் அவரை மாறக ஸ்தானத்தில் அமரும் பொழுது சனியின் நிலையையும் பார்த்து ஆயுளை தீர்மானம் செய்ய வேண்டும்.
💥 பெரும்பாலும் இவர்களுக்கு தாம்பத்தியம் சுகம் கிடைக்காததாலயே மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குடும்பத்தில் சண்டை சக்கரவு காரணமாக பிரிவினை ஏற்படுகிறது. சிலருக்கு போதை பொருட்களுக்கு அடிமை ஆகிறார்கள்.
💥 இருப்பினும் இதன் மூலம் சில நல்ல குணங்களும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பஸ்தானத்தை குரு பார்ப்பதால் சகல வித திறமைகளும் உண்டு அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். கிரகங்கள் அதிகமாக இருந்தாலும் சுப விரயம் உருவாகும். கூட்டுக் குடும்பத்தை நிர்வகிக்கும் சூழல் ஏற்படும் அதனாலையே பொறுப்புகள் அனைத்தும் தங்கு ஜாதகர் தலையில் விடியும். கெட்ட செயல்களில் ஈடுபட மனம் அதிலிருந்து விலகினாலே போதுமானது. தனது வாழ்க்கை துணையிடமிருந்து எதிர்பாராத சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
💥 முன்னர் கூறியது போல குழந்தை பெறுவதில் அதிக கவனம் வேண்டும். எந்த விதத்திலும் குரு பாவ கிரகங்களுடன் எட்டாம் இடத்தில் தொடர்பு படக்கூடாது சுப கிரகங்கள் இணைந்தால் அல்லது பார்த்தால் கூட நன்மையை தரும். திருமணம் தடைபடும் என்பதால் நல்ல தசா புத்தி காலத்தில் விரைவாக திருமணம் செய்வது நல்லது.
✅️ இதில் ஸ்தான பலம் தர்ப்பணம் இணைந்த கிரகம் பார்க்கும் கிரகம் சாரம் பொருத்து பலன்கள் மாறுபடும் இது பொது பலன் மட்டுமே.
.