எந்த இரு கிரகங்கள் அமர்ந்த இடத்தை விட பார்த்த இடத்திற்கு பாதிப்பை அதிகம் தருவார்கள்
சனி செவ்வாய்
🔸பொதுவாக இந்த இணைவு பெரும்பாலும் விபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இரு கிரகங்களும் மூன்றில் இணைந்து ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தை பார்க்கும் பொழுது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.
✅️ சனி குரு
🔸 இந்த இணைவு பெரும்பாலும் பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள் அது ஒரு புறம் இருக்கட்டும். வாழ்க்கை முழுக்க போராட்டம் நிறைந்ததாகவே காணப்படும் குறிப்பாக இவர்கள் இருவரும் சேர்ந்து பத்தாம் இடத்தை பார்த்தால் தன் வாழ்நாள் முழுக்க முன்னேற்றத்தை காண இயலாது இறைவன் ஒருவரே துணை நிற்க வேண்டும்.
✅️ சுக்கிரன் குரு
🔸 இந்த இணைவு பெரும்பாலும் களத்திரத்திற்குள் சச்சரவை ஏற்படுத்துகிறது. இந்த இணை உள்ளவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் அனுசரித்து விட்டு சென்றால் நல்லது. பெரும்பாலும் மனதளவில் இல்லற திருப்தியை இழக்கின்றனர்.
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் கிரக இணைவு பலன்கள் மிகச் சிறப்பு ஐயா
Really great ayya