திரிகோணம் என்பது மூன்று சம பக்கங்களை கொண்ட ஒரு சதுர அமைப்பு ஆகும்.
முன்னோர்கள் நான்கு வகையான திரிகோண வடிவங்களை வகுத்து சென்றுள்ளனர்.
அவையாவன:
🟡 1. தர்ம திரிகோணம்
🟢 2. கர்ம திரிகோணம்
🟣 3. காம திரிகோணம்
🟠 4. மோட்ச திரிகோணம்
🟡 தர்ம திரிகோணம்
இவை கால புருஷ லக்ன
திரிகோணங்கள்
என்று
அழைக்கப்படுகிறது.
இந்த திரிகோணம் ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கால புருஷ தத்துவத்தில் உலகத்தின் மித்திரன் என்று அழைக்கப்படும்
“சூரியன்”
உச்சம் பெறும் ராசி என்பதாலும்,
சூரியனின் தயாள குணம் இந்த திரிகோணத்திற்கு காணப்படுகிறது.
மேலும்
இந்த திரிகோணங்கள் ஒரே வகை பஞ்சபூத தத்துவத்தை காட்டுவதை நாம் காணலாம்.
மேலும்
இந்த திரிகோணங்கள் நம் பாரம்பரிய கட்டமைப்பை கூறுவதை காணலாம்.
இந்த தர்ம திரிகோணத்தில் இருக்கும் திரிகோண புள்ளிகள்
பின்வருமாறு:
1. மேஷம் –
அதிபதி செவ்வாய்
(மூலத்திரிகோண வீடு)
2. சிம்மம் –
அதிபதி சூரியன்
(மூலத்திரிகோண வீடு)
3. தனுசு –
அதிபதி குரு
(மூலத்திரிகோண வீடு)
இவ்வாறு திரிகோண புள்ளிகள் மூன்றும் மூலத்திரிகோண வீட்டை குறிக்கிறது.
மேலும்
இந்த மூன்று பாவத் பாவ அடிப்படையில் ஒன்றே ஒன்று சார்ந்துள்ளது.
பலன்கள்:-
இந்த தர்ம திரிகோண வீட்டை தன் லக்னமாக கொண்டவர்கள், தர்மவான்களாக இருப்பதை காணலாம்.
குரு தர்ம திரிகோணத்தில் அமர்ந்து லக்னத்தை பார்க்கும் போது,
அவர்கள் தன் வாழ்நாளில் ஒருநாள்,
மிக பெரிய தர்ம காரியம் செய்வார்கள்.
மேலும்,
இந்த மூன்று வீட்டிலும்,
இந்த மூன்று கிரகங்கள் பரிவர்த்தனை பெற,
மிக பெரிய தர்ம ஸ்தாபனங்களை அமைக்கும் நிலை ஏற்படும்.
பசித்தவர்க்கு
அன்னமும்,
பொருளும்
கொடுக்கும் கொடை வள்ளலாக இருப்பார்கள்.
அல்லது
அந்த வம்சவழியில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
இந்த திரிகோண புள்ளிகளில் திருநங்கை கிரகங்கள் என்று சொல்லப்படும்.
சனி,
ராகு,
கேது
மற்றும் இவர்களுடன் சேர்ந்த
புதன்
இருக்க, தர்ம சிந்தனை குலைவதை பார்க்கலாம்.
முன் ஜென்ம பாவங்களும்,
முன்னோர்கள் செய்த பாவங்களும்
இந்த தர்ம சிந்தனை குறைய காரணமாகிறது.
மேலும்
புத்திர பிராப்தி தடை செய்யும்
“நாக தோசம்”
ஏற்படுத்திவிடுகிறது
அல்லது
அந்த வம்சாவழி புத்திரர்கள் பாதிக்கிறது.
தர்ம திரிகோணம் பாதிக்கபட்டவர்கள்,
சூரியனார் கோவில் வழிபாடு,
சூரிய நமஸ்காரம் செய்ய
நல்ல பலன்கள் ஏற்படும்.
மேலும்
தடைபட்டு இருக்கும் முன்னோர்கள்
அல்லது
குலதெய்வ வழிபாடுகளை
முறைப்படி மறுபடி செய்துவந்தால் இந்த தோசங்கள் நீங்கும்.
🟢. கர்ம திரிகோணம்
( தனம் பணம் வருமானம் வேலை ஜீவனம் )
2 6 10 பாவகங்கள் கர்ம திரிகோணம்
அல்லது
பொருள் திரிகோணம்.
2 வீடு தனம் பணம் கையில் இருக்கும் சேமிப்பு வரவு செலவு ரொட்டேஷன்
6 வேலை சர்வீஸ் சேவை செய்ய அற்பணிப்பு அடிமை பணி கடன் படுதல்
10 தொழில் பதவி ஜீவனம் வருமானம் முதலாளி பெரும் பொருள் சேர்ப்பது.
2 6 10 என்றாலே பணத்தின் பின்னால் ஓடுவது
தான் பணத்தை பொருளாக மாற்றுவது…
இதில் எந்த ஒன்று வலுவாக உள்ளது என்பதை பொறுத்து
ஒருவரின் பணம் பொருள் நிலையை கணக்கிடலாம்.
மாதம் இவ்வளவு வருமானம் வரனும் ,
மாதம் மாதம் இவ்வளவு சம்பளம் வாங்கனும் ,
மாதம் மாதம் இவ்வளவு பணத்தை சேமிக்கனும் ,
வரவு செலவில் வைக்கனும் அப்படிங்கிற எண்ணத்தை தருவது
2 6 10 பொருள் திரிகோணம்.
மனிதனை வேலையிலோ தொழிலிலோ முழுமையாக ஈடுபடவைப்பது
2 6 10 தான் .
சிலர் காலை 7 மணிக்கு கடை திறந்து ,
இரவு 11 மணி வரை கடையில் இருப்பாங்க
முதலாளியாக லட்சத்தில் பணத்தை போட்டு எடுப்பார்கள்
தொழில் விட்டு மனசு போகாது.
சிலர் அரசாங்க நிறுவனத்தில் 40k சம்பளத்தை
Over Time பார்த்து கொண்டே 70k வாங்குவார்கள்.
நிரந்தரமாக ஓர் நல்ல வருமானம் அமைந்து வேலை அல்லது தொழில் விட்டு மனசு வேறு எங்கும் மாறாது. சிலர் பதவி பொறுப்பு இல்லாமல் தூங்க மாட்டார்கள்.
அலுவலக பொறுப்பான பதவி ,
கட்சி பதவி ,
அதிகார பதவி விரும்புவார்கள்.
இதை பண்ண வைப்பது
2 6 10 கர்ம திரிகோணம்தான்.
2 6 10 ல் அதிகபடியான கிரகங்கள் இருப்பது ,
2 6 10 அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனையாக இருப்பது ,
2 6 10 ல் குரு இருப்பது
அல்லது
இயற்கை சுபர்கள் இருப்பது போன்றவை தொழில் வேலை வருமானம் வலுபடுத்தி தரும்…
இதில் நின்ற கிரக தசாவோ
அதிபதிகள் தசாவோ
ஜாதகனை பொருள் பணம் சம்பாதிக்க தூண்டி விடும்.
இந்த பொருள் திரிகோணம் ஒருவரை பொருள் பணம் வருமானம் சேர்க்கதான் உதவுமே தவிர பெரும் பணக்காரர் கோடீஸ்வரர் ஆக மாற்றாது.
அந்த நிலை எட்ட
2 5 8 9 10 11 அதிபதிகள் வலுவாக வேண்டும்.
🟣 காம திரிகோணம்
உங்கள் வாழ்க்கையில் தாம்பத்தியம் எப்படி அமையும்?
தாம்பத்திய வாழ்க்கை,
குழந்தைப் பேறு,
தாம்பத்திய சுகம்
உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்பதை
திருமணத்தின் போது ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும்
காம திரிகோணம் இடத்தைப் பொறுத்து கணிப்பதுண்டு.
அவர்களின் ஜாதகத்தைப் பொருத்து தம்பதிகளின்
திருமண தாம்பத்திய வாழ்க்கை,
குழந்தைப்பேறு,
அந்நியோன்னியம்
எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.
ஒவ்வொருவரின் வாழ்வில் திருமணம் மிக முக்கியமான ஒரு பகுதியாகும்.
இதையெல்லாம் கணிக்கக்கூடிய ஜோதிட அமைப்பைத் தான்
காம திரிகோணம்
என்கின்றனர்.
அது எப்படி அமைந்திருந்தால் அவர்களின் திருமண வாழ்வு எப்படி இருக்கும்
என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்…
இப்போது பின்தொடரவும்
தாம்பத்திய வாழ்க்கை,
குழந்தைப் பேறு,
தாம்பத்திய சுகம்
உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்பதை திருமணத்தின் போது ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும்
காம திரிகோணம் இடத்தைப் பொறுத்து கணிப்பதுண்டு.
அவர்களின் ஜாதகத்தைப் பொருத்து
தம்பதிகளின் திருமண தாம்பத்திய வாழ்க்கை,
குழந்தைப்பேறு,
அந்நியோன்னியம்
எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.
ஒவ்வொருவரின் வாழ்வில் திருமணம் மிக முக்கியமான ஒரு பகுதியாகும்.
what is kama thirikonam in astrology and what are the planets houses impact on the sexual life
இதையெல்லாம் கணிக்கக்கூடிய ஜோதிட அமைப்பைத் தான் காம திரிகோணம் என்கின்றனர்.
அது எப்படி அமைந்திருந்தால் அவர்களின் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்…
காம திரிகோணம் அமைப்பு
ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவனுக்கு எந்த வித பிரச்சினையோ,
அதற்கான தீர்வை ஜோதிடர்கள்
கிரக நிலை, ஜாதக அமைப்பைப் பொருத்து சொல்வது உண்டு.
அந்த ஜாதக அமைப்பு அவரின் தாம்பத்தியம் எப்படி அமையும்
என்பதை விளக்கக் கூடியதாக இருக்கும்.
சில கிரகங்களும் அவை அமைந்துள்ள இடமும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
காதல் திருமணம் யாருக்கு அமையும்?-
ஜாதகம் எப்படி அமைந்திருந்தால் காதல் கைகூடும் தெரியுமா?
காமத்திரிகோண பாவகங்கள்:
காமத்திரிகோணம் என்பது
3,7,11
ஆகிய பாவகங்கள் குறிப்பிடப்படுகின்றது.
இந்த 3ஆம் இடம் என்பது
இளைய சகோதரர்,
தைரிய ஸ்தானம்,
குழந்தை பாக்கியம் என குறிப்பிடப்படுகிறது.
7ம் இடம் மனைவி,
தாம்பத்தியம் ஸ்தானம்,
11ம் இடம்
ஆசை,
இச்சை ,
மூத்த சகோதரர்
லாப ஸ்தானமாக குறிப்பிடப்படுகிறது
ஒருவரின் தைரிய,
வீரிய ஸ்தானம் ஆகும்.
இந்த 3ஆம் இடம் வலுத்தால்
ஆணாக இருந்தால் தந்தையாகவோ,
பெண்ணாக இருந்தால் தாய் ஆகும் தகுதி ஏற்படும்.
இந்த வீடுகள் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கும். இந்த அமைப்பில் உங்கள் ஜாதகம் கிரகம் அமைப்பைப் பொறுத்து தாம்பத்தியம் அமையும்.
எப்போது பிரச்னை ஏற்படும்?
இந்த மூன்று அமைப்புகளும் அதற்கான கிரகங்கள் வலுவாக இருப்பது நல்லது.
3ம் பதி சூரியனுடன் நெருக்கமாக இருந்தால் பாதிப்பு ஏற்படும்.
இதனால் இல்லற சுகம் இல்லாமல்.
குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
ஜோதிடம் அறிவோம்:
காமதிரிகோணம் பார்ப்பது அவசியமா?
ஒருவருக்கு 8ல் சனி இருப்பதும்
அதே போல் அவர் மணக்கும் துணைக்கும்
8ல் சுப கிரகம் இருந்தால்
அவர்களுக்கு பல பிரச்னைகளுடனே
தாம்பத்தியம் மேற்கொள்ள முடியும்.
8ல் சுப கிரகமும்,
அடுத்தவருக்கு எந்த 8ல் கிரக அமைப்பே இல்லையெனில் நல்லது.
🟠. “மோட்ச ஸ்தானங்கள்”
ஜோதிடத்தில் 4, 8, 12 ஆகிய வீடுகள்
“மோட்ச ஸ்தானங்கள்”
அல்லது
“உள்ளுணர்வு வீடுகள்”
என்று அழைக்கப்படுகின்றன.
இவை
தியானம்,
உள் ஞானம்,
ஆன்மீக வளர்ச்சி
மற்றும்
இறுதி மோட்சம்
ஆகியவற்றைக் குறிக்கின்றன.
இந்த வீடுகளைப் பற்றி பாரம்பரியமாக சில தவறான எண்ணங்கள் இருப்பினும்,
இவை ஞானம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை நோக்கிய ஒரு பாதையாக கருதப்படுகிறது.
4, 8, 12 வீடுகள் மற்றும் மோட்சம் :
4வது வீடு:
இது உங்கள் உள் உலகத்தையும்,
வீட்டையும்,
வாழ்க்கையின் அடித்தளத்தையும்
குறிக்கிறது.
இது மோட்சத்தின் பாதையில் ஒரு ஆரம்ப நிலையாகும்.
8வது வீடு:
இது மறைக்கப்பட்ட விஷயங்கள்,
இருண்ட இடங்கள்
மற்றும்
ஆழ்ந்த தியானம்
ஆகியவற்றைக் குறிக்கிறது.
இது உங்கள் வாழ்க்கையின் மறைக்கப்பட்ட அர்த்தத்தைக் கண்டறிய உதவுகிறது.
12வது வீடு:
இது ஆன்மீக ஞானம்,
தியாகம்
மற்றும்
மோட்சத்தின் இறுதி நிலையைக் குறிக்கிறது.
இது செலவுகள்,
விரயங்கள்
மற்றும்
இழப்புகளையும்
குறிக்கலாம்,
அவை சில சமயங்களில் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மற்ற குறிப்புகள்:-
இந்த மூன்று வீடுகளும் நீர்க்கூறுகளுடன் தொடர்புடையவை,
மேலும்
இவை உள்ளுணர்வு மற்றும் ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
இந்த வீடுகளை
“மறைவு ஸ்தானங்கள்”
என்றும் அழைப்பதுண்டு,
ஏனெனில்
அவை பொதுவாக மறைக்கப்பட்ட
அல்லது
உள்ளுணர்வு சார்ந்த விஷயங்களுடன் தொடர்புடையவை.
4, 8, 12 வீடுகளில் கிரகங்களின் வலிமை
அல்லது
பலம்,
ஒருவரின் ஆன்மீகப் பாதையில்
எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என்பதை அறிய உதவும்.
சில ஜோதிடர்களின் பார்வையில்,
12வது வீடு
இன்பம் மற்றும் உறக்கத்தையும் குறிக்கலாம்.
இந்த வீடுகள் பற்றிய மேலும் விரிவான தகவல்:-
ஜாதகத்தில் 4-8-12ம் இடங்களும்
அதன் அதிபதிகளும்
வலிமை பெற்று தொடர்புற
படிப்படியாக சிறந்த வீடு
சகல ஐஸ்வர்யங்கள் கிடைத்தே தீரும்
Super presentation which are in the simple and easily understand the essence of Astrology even for learners like me.
Great sir,
Regards
எளிமையான விரிவான விளக்கம்