பெண்ணுக்கு
திருமணம்
எப்போது நடை பெறும்?
பதில்:
1 .ஜென்ம லக்னத்திற்கு
2,5,7,9,11 இடங்களில் ,
குரு
கோச்சாரத்தில் வரும் போதும்
2 .ஜென்ம லக்னத்திற்கு 3,5,6,7,10 ஆகிய
இடங்களில் சந்திரன் இருக்கும் போது ,
அதை குரு, சூரியன் , புதன்
ஆகியவர்களால் பார்க்கப்படும்
போதும்
3. சந்திரன்/ ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய
இடங்களில் குரு உள்ள போது
அல்லது
இந்த இடங்களில் உள்ள சந்திரனை
குரு பார்க்கும் போதும்
பெண்ணிற்கு திருமணம் என்னும்
விவாகம் நடைபெறும்….
விளக்கம்:-
திருமணத்திற்கு 2, 7, 11 ஆம் இடங்களை பார்க்க வேண்டும் .
2 ஆம் இடம் குடும்பம் அமைவதை சொல்லும்
7 வாழ்க்கை துணை அமைவதை சொல்லும்
11ஆம் இடம் அபிலாசைகள் பூர்த்தியாவதை சொல்லும் .
திருமண உறவில் ஈடுபட்ட பின்
அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும்.
5 ஆம் இடம் குழந்தை பாக்கியத்தையும்,
9 ஆம் இடம் அந்த பெண்ணின் கர்ப்பம் தாங்கும் சக்தியையும் காட்டும் .
6ஆம் பாவம்
7 ஆம் பாவத்திற்கு விரயம்
மற்றும்
10ஆம் பாவத்திற்கு பாக்கிய வீடாகவும் வரும்.
ஆணிற்கு கூடுதலாக வீரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 3ஆம் வீட்டையும் ,
பார்க்க வேண்டும்.
🔸 “ முத்தான முக்கிய குறிப்பு: “
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
சூரியன் மறைந்த பின் சந்திரன் வருவது போல—
கடைசியில் குறிப்பிட்டலும் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்,
இருவருக்கும் ,
அயன சயன போக ஸ்தானம் எனும் 12ஆம் பாவம் திருமணம் செய்யும் போது பாவர்கள் தொடர்பில் இல்லாமலும் கூடுதலாக பார்க்க நல்லது.
இல்லாவிட்டால் எல்லாம் சரியாக செய்து விட்டு மண்டையில் உள்ள கொண்டையை மறந்த கதையாக வீணாகி விடும்
அந்த திருமணம்.
திருமணம் கைகூட பார்க்கப் படும் நிறைய விஷயங்களில் மேற்கூறியவைகள் ஒரு பகுதி தான்.
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு
Nice
Very Accurate and understanding. Thank you. 🙏
அருமையான பதிவு
Dear Sir,
Great inputs for learners like me 👌
Nice ..easy and understandable content